திருநெல்வேலி:தெற்கு பைபாஸ் சாலையில் சரவணா செல்வரத்னம் வணிகவளாகம் உள்ளது. சில தினங்களுக்கு முன் அங்கு சென்ற ஒருவர் நெய், ஹார்லிக்ஸ் பாட்டில்களை திருடி வேட்டிக்குள் மறைத்து சென்றார். 

அவர் தரைத்தளத்திற்கு வந்தபோது செக்யூரிட்டிகள் அவரை கையும் களவுமாக பிடித்து பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பரபரப்பான இந்த சம்பவம் குறித்த வீடியோக்கள் வைரலாக பரவியது. இருப்பினும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரண்டுபேர் அரிவாள்களுடன் கடையில் புகுந்து அங்கிருந்த கண்ணாடிகளை உடைத்தனர். தங்களை எதுவும் செய்யமுடியாது என மிரட்டல் விடுத்துச்சென்றனர். விசாரணையில் ஏற்கனவே நெய்,ஹார்லிக்ஸ் பாட்டில் திருடி பிடிபட்ட தாழையூத்து முருகானந்தம் என தெரிந்தது.

இதையடுத்து முருகானந்தத்தை போலீசார் கைது செய்து மேலப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் கொண்டுசென்றனர். அங்குள்ள பாத்ரூமில் அவர் திடீரென வழக்கம் போல்  வழுக்கி விழுந்து காயமடைந்தார்.

இத்னைத் தொடர்ந்து அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் முருகானந்தம் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த கடையில் தகராறில் ஈடுபட்ட மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

பொதுவாக  சென்னையில் திருடுபவர்கள், தகராறில் ஈடுபடுபவர்கள் போலீஸ் விசாரணையின்போது வழுக்கி விழுந்து காயமடைந்த  புகைப்படங்கள் வெளி வரும்.  தற்போது நெல்லையிலும் ரவுடி வழுக்கிவிழுந்து காயமுற்ற படம் வெளியாகியுள்ளது.