கடந்த 10ம் தேதி முதல் மணிகண்டனின் செல்போன், ஸ்விட்ச் ஆப் என வந்ததால் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, உறவினர்கள் விசாரித்தபோது அவர்கள் பயன்படுத்திய லோடு ஆட்டோ பாரதியார்நகர் ரயில்வே கேட் பகுதியில் கேட்பாரற்று கிடந்துள்ளது. உடனே இதுதொடர்பாக சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

நெல்லையில் கஞ்சா விற்பனை குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்த ஆத்திரத்தில் அண்ணன், தம்பியை கொடூர கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் (58). பேரூராட்சி தூய்மை பணியாளர். இவரது முதல் மனைவி பாண்டியம்மாள். இவர்களது மகன் மணிகண்டன் (25), மகள் பிரியதர்ஷனி(23). கடந்த 20 வருடங்களுக்கு முன்பு பாண்டியம்மாள் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததையடுத்து, முருகேஸ்வரி (30) என்பவரை நாகராஜ் 2வது திருமணம் செய்து கொண்டார். இவர்களது மகன் சபரீஸ்வரன் (13). வத்தலகுண்டில் ஆட்டோ ஓட்டி வந்த மணிகண்டன் போதிய வருமானம் இல்லாததால் 2 வருடங்களுக்கு முன்பு லோடு ஆட்டோவை வாடகைக்கு எடுத்து வெங்காயம் விற்று வந்தார். 

கடந்த 10ம் தேதி முதல் மணிகண்டனின் செல்போன், ஸ்விட்ச் ஆப் என வந்ததால் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, உறவினர்கள் விசாரித்தபோது அவர்கள் பயன்படுத்திய லோடு ஆட்டோ பாரதியார்நகர் ரயில்வே கேட் பகுதியில் கேட்பாரற்று கிடந்துள்ளது. உடனே இதுதொடர்பாக சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் சுத்தமல்லி ராஜீவ்நகரைச் சேர்ந்த சுப்பையா மகன்கள் சதீஷ்குமார்(23), பார்த்திபன்(22) ஆகியோர் மணிகண்டன், சபரீஸ்வரனை அடுத்தடுத்து அழைத்துச் செல்வது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் சதீஷ்குமார், பார்த்திபனை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், மணிகண்டனையும், சபரீஸ்வரனையும் கழுத்தை நெரித்துக் கொன்றதை ஒப்புக் கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் கொண்டாநகரம் ரயில்வே கேட்டை அடுத்த ராகவேந்திரா கோயில் பின்புறமுள்ள குன்றில் பாழடைந்த கட்டிடத்திற்குள் கை, கால்கள் துணியால் கட்டப்பட்டு அழுகிய நிலையில் மணிகண்டன் உடலை போலீசார் மீட்டனர். ஆனால் சபரீஸ்வரன் உடலை காணவில்லை. ஆங்காங்கே எலும்புகள் சிதறிக் கிடந்தன.

தொடர்ந்து அப்பகுதியில் தேடியபோது மண்டை ஓடு ஒன்று கிடந்தது. சபரீஸ்வரன் சட்டையையும் போலீசார் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட உடல் பாகங்கள் சபரீஸ்வரனுடையது தானா என்பதை அறிய சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளனர். சதீஷ்குமார் கஞ்சா விற்றது குறித்து போலீசுக்கு மணிகண்டன் தெரிவித்ததால் இந்த இரட்டை கொலை நடந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.