கோவை கார் வெடி விபத்து..! களத்தில் இறங்கிய என்ஐஏ..! சம்பவ இடத்தில் விசாரணை நடத்த திட்டம்

கோவை கார் வெடி விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் என்ஐஏ குழுவினர் கோவையில் முகாமிட்டுள்ளனர். இன்று மதியத்திற்கு பிறகு சம்பவ இடத்தில் விசாரணையை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

National Investigation Agency investigation into Coimbatore car blast accident

கோவை கார் வெடி விபத்து

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு  திடீரென காரில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளனது. இந்த விபத்தில் கார் முழுவதும் பற்றி எரிந்தது.  இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒருவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து நடைபெற்ற இடத்தில் ஆணி, பால்ராஸ் குண்டுகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு நடைபெற்ற விசாரணையில் இறந்தது ஜமேசா முபின் என தெரியவந்துள்ளது. அவரது வீட்டில் நடைபெற்ற சோதனையில் வெடிபொருட்களுக்கு தேவையான பொட்டாட்சியம் நைட்ரேட், அலுமினியம், சல்பர் போன்ற வெடி குண்டுகள் தயாரிக்க தேவையான பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டனர். 

மதக் கலவரங்களை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் பெற நினைப்பதா.? அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த செந்தில்பாலாஜி

National Investigation Agency investigation into Coimbatore car blast accident

5 பேர் உபா சட்டத்தில் கைது

அப்போது  ஜமேசா முபின் வீட்டில் இருந்து 4 பேர் மர்ம பொருளை தூக்கி செல்வது போன்ற காட்சி பதிவாகியிருந்தது. இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகியோர் கைது செய்யப்பட்டு UAPA சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் தீவிதவாதிகளோடு தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்டு கேராள சிறையில் உள்ள அசாருதீனை கைது செய்யப்பட்ட நபர்கள் சந்தித்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு நடத்த திட்டமிட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. இந்தநிலையில் இந்த வழக்கை என்ஐஏ விசாரிக்க வேண்டும் என பாஜகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். 

கோவை குண்டு வெடிப்பு திட்டமிட்டதுதான்.! முதல்வர் கண்டனம் சொல்லவே இல்லை - பற்ற வைக்கும் எச்.ராஜா

National Investigation Agency investigation into Coimbatore car blast accident

கோவையில்  என்ஐஏ விசாரணை

கோவை கார் வெடி விபத்து தொடர்பாக தமிழக போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தேசிய புலனாய்வு அமைப்பு கோவையில் முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தேசிய புலனாய்வு முகமையின் டி ஐ ஜி மற்றும் கண்காணிப்பாளர் தலைமையில் குழுவினர் கோவையில் பிற்பகலில் விசாரணையை துவக்குவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்

கோவை கார் வெடி விபத்து.! பொது வெளியில் கவனமுடன் கருத்து கூற வேண்டும்.! பாஜகவிற்கு சசிகலா அறிவுரை

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios