தமிழகம் முழுக்க கஞ்சா மற்றும் போதை மாத்திரை கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.
கோவை மாநகரில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் போதை மாத்திரைகளை பயன்படுத்தும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோவை மாநகரில் மட்டுமல்ல தமிழகம் முழுக்க போதை மாத்திரை கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. கோவை மாநகரில் மட்டும் இதுவரை போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த 30க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
![]()
தொடர்ந்து மாநகரில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். குனியமுத்தூர் ஆசாத் நகரில் உள்ள மைதானத்தில் சிலர் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து குனியமுத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்ற கரும்புக்கடையை சேர்ந்த அசாருதீன், முகமது யாசர் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 10 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !
மேலும் அவர்களிடமிருந்து 22 போதை மாத்திரைகள் மற்றும் ரூ. 30 ஆயிரம் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல ஈரோட்டிலும் அதிர்ச்சிகர சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அத்தாணி பாலம் அருகே 5 வாலிபர்கள் அமர்ந்து கொண்டு இருந்தனர். அவர்கள் போதை மாத்திரைகள் பயன்படுத்தி மயக்க நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
![]()
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் போலீசாருக்கு தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் அந்தியூர் தவிட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் என்பதும், அவர்கள் போதை மாத்திரை பயன்படுத்தியதும் தெரிய வந்தது.
இதையடுத்து அந்த வாலிபர்களை அந்தியூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர்களுக்கு போதைப் பொருட்களுக்கு அடிமையாக வேண்டாம் என அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும்சப் -இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
மேலும் செய்திகளுக்கு..கொடூரம் ! காதலித்த மகளுக்கு விஷ ஊசி போட்ட தந்தை.. கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்