விருதாச்சலம் அருகே இருக்கிறது வி.என்.ஆர் நகர். இங்கிருக்கும் ஜமால் பாஷா தெருவில் கடந்த சில நாட்களாக அடிக்கடி கொள்ளை சம்பவம் நடந்து வந்தது. வீடுகளில் ஜன்னல் ஓரங்களில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் தொடர்ந்து திருடு போயின. இதனால் தெருவில் வசிப்பவர்கள் அச்சத்தில் இருந்துள்ளனர்.

இதே தெருவில் ரம்ஜான் அலி என்பவர் வசித்து வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல அவர் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்திருக்கிறார். அப்போது அந்த வீட்டிற்குள் திருடன் ஒருவன் புகுந்து இருக்கிறான். சத்தம் கேட்டு விழித்த ரம்ஜான் திருடன் வந்ததை உணர்ந்திருக்கிறார். வீட்டில் இருப்பவர்கள் விழித்ததை அறிந்த திருடன் உடனடியாக
 அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான். 

இதையடுத்து தனது வீட்டில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராக்களை ரம்ஜான் அலி ஆய்வு செய்திருக்கிறார். அப்போது அதில் பதிவான காட்சிகளை கண்டு அவர் அதிர்ந்து போனார். வீட்டிற்கு திருட வந்த கொள்ளையன் உடம்பில் ஒட்டு துணி கூட இல்லாமல் நிர்வாண கோலத்தில் கையில் ஒரு பிளாஸ்டிக் பைப்புடன் வந்திருக்கிறான். அந்த பைப்பை உபயோகப்படுத்தி ஜன்னல்வழியாக வீட்டிலிருந்த பொருட்களை திருட முயன்ற போதுதான் சத்தம்கேட்டு ரம்ஜான் அலி அளித்திருக்கிறார். 

இதையடுத்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது உடம்பில் ஒட்டுத் துணியும் இல்லாமல் நிர்வாண கோலத்தில் வந்த பப்பி சேம் திருடனால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.