பெண்களை ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில்  கைதான காசி குறித்து பல்வேறு அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

சென்னையை சேர்ந்த இளம்பெண் டாக்டரை காதலிப்பதாக கூறி ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் நாகர்கோவில் கணேசபுரத்தில் சேர்ந்த காசி என்ற சுஜி(26)யை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் 80க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டியது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக காசி மீது புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

காசி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது போலீஸ் காவல் இன்றுடன் முடிகின்ற நிலையில் காசியை மாலையில் போலீசர் போலீசார் மீண்டும் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.  இதற்கிடையே காசிக்கு உதவியதாக பெண்களின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பரப்ப உதவியாக இருந்த  நாகர்கோவில் கே.பி.ரோடு அப்சர்வேட்டரி தெருவை சேர்ந்த  டீசன் ஜினோ(19) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். இதனைப் போன்று காசிக்கு நண்பர் உதவிய நண்பர்களின் பட்டியலையும் போலீசார் தயார் செய்துள்ளனர். அடுத்து வரும் நாட்களில் அவர்களும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே காசியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளன.

பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகள் காசியை உயிருக்கு உயிராக காதலித்துள்ளார். அவரையும் ஏமாற்றி ஆபாசமாக படம் பிடித்ததுடன் பணம் பறித்ததாகவும் கூறப்படுகிறது. அவர் திருமணம் செய்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். பெற்றோரிடம் அவர் விருப்பத்தை தெரிவித்துள்ளார். மகளின் விருப்பத்தை நிறைவேற்ற பெற்றோர் முடிவு செய்தனர். இதனை, அவரது பெற்றோரிடம் தெரிவித்து காசியை திருமணம் செய்வதற்கு நிச்சயதார்த்தம்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 இதற்காக இந்த பெண்ணின் பெற்றோர் பெங்களூருவில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகர்கோவில் வருகை தந்து இங்கு தங்கியிருந்து அதற்கான ஏற்பாடுகளைசெய்து வந்துள்ளனர். ஆனால், கடைசி நேரத்தில் காசி பல பெண்களுடன் தொடர்பு உள்ளவர் என்று அவரது நண்பர்கள் சிலரே பெங்களூரு பெண்ணிடம் அவரது குடும்பத்தினரும் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால், அவர்கள் திருமண முடிவை கைவிட்டு மீண்டும் பெங்களூர் திரும்பியுள்ளனர். இதற்கிடையே காசியால் பாதிக்கப்பட்ட பெண் டாக்டர் ஒன்று திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதனால், வரும் நாட்களில் காசி மீதான புகார்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், காசி மீதான புகார்கள் அடிப்படையில் கூடுதல் நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.