மன வளர்ச்சி குன்றிய குழந்தையிடமும்  சில்மிஷம்..!  தள்ளாடும் வயதில் கேவலமான செயல்..! 

மனவளர்ச்சி குன்றிய சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட நபரை போக்ஷோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆவடியில் ஜே ஜே நகரில் தன் தாயுடன் வசித்து  வருகிறார் 11 வயது மதிக்கத்தக்க மனவளர்ச்சி குன்றிய சிறுமி. இந்த நிலையில் கடந்த 3 ஆம் தேதி அன்று வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை நோட்டமிட்ட அதே பகுதியை சேர்ந்த 50 வயதான நாகராஜ் என்பவர் சிறுமியிடம் பேசத் தொடங்கியுள்ளார்.

அப்போது நைசாக பேசி கடைக்கு அழைத்துச் சென்று மிட்டாய் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார். மனவளர்ச்சி குன்றிய குழந்தை எனபதால், தனக்கு இனிப்பு வாங்கி தருவார் என சிரித்துக்கொண்டே  காம  கயவனுடன் சென்றுள்ளார் சிறுமி. பின்னர் நாகராஜ் தன்னுடைய வீட்டிற்கு சிறுமியை அழைத்து சென்று சில்மிஷம் செய்துள்ளார்.

அப்போது சிறுமி அழ தொடங்கியதால் சிறுமியை வீட்டிற்கு போகும்படி தெரிவித்து உள்ளார். பிறகு தன் தாயிடம் நடந்த சம்பவத்தை எடுத்துக் கூறியுள்ளார் சிறுமி. இதனைக் கேட்டு பதற்றம் அடைந்த தாய் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நாகராஜை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்