நாகையில் தங்கை வீட்டுக்கு நடந்து சென்ற விதவை பெண்ணை தூக்கிச் சென்று கோயிலுக்குள் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் அதனை தடுக்க பல்வேறு சட்டங்களை இயற்றியும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளையும் வழங்கி வருகிறது. நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் அதனை தடுக்க பல்வேறு சட்டங்களை இயற்றியும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளையும் வழங்கி வருகிறது. ஆனாலும் குற்றம் குறையவில்லை. அதுபோன்ற ஒரு சம்பவம் தமிழகத்தில் நாகை மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது. 

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரா (40) விதவை பெண் கட்டிட வேலை செய்து வந்தார். அவரது கணவர் இறந்துவிட்டார். இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இரவு நேரங்களில் தனது மகள்களுடன் அருகிலுள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்று தூங்குவது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் சகோதரி வீட்டுக்கு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த அருண்ராஜ் (25), ஆனந்த் (26) ஆகிய 2 வாலிபர்கள் வழிமறித்தனர். பின்னர், கண்ணிமைக்கும் நேரத்தில் வாயை துணியால் பொத்தி அவரை சரமாரியாக தாக்கி அங்குள்ள கோயில் வளாகத்துக்கு வலுக்கட்டாயமாக தூக்கி சென்றனர். இரவு நேரமானதால் அப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லை. இதனை சாதகமாக பயன்படுத்திய அருண்ராஜ், ஆனந்த் இருவரும் சந்திராவை கோயில் பின்புறத்தில் தூக்கிச் சென்று மாறி மாறி பலாத்காரம் செய்தனர். இருவரும் கஞ்சா போதையில் இருந்ததால் இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டனர்.

இதன்பின், யாரிடமாவது கூறினார் கொலை செய்து விடவோம் என்று அரிவாளை காட்டி மிரட்டிவிட்டு 2 பேரும் இருசக்கர வாகனத்தில் தப்பித்து சென்றனர். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பாலியல் பலாத்காரம் செய்த அருண் ராஜ், ஆனந்த் இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து மேகலாவை நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். கஞ்சா போதையில் இருந்த வாலிபர்கள் பெண்ணை கோவிலுக்குள் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து தூக்கிலிட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.