கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அருகே மருதம்நகர், பாரதி காலனி, பூம்புகார் நகர் என ஏராளமான காலணிகள் உள்ளன. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பெரும்பாலான வீடுகளில் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக வீட்டு உரிமையாளர் ஒருவர் தனது வீட்டில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து பார்த்துள்ளார்.

அப்போது இரவு நேரத்தில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். குறிப்பிட்ட வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர் சுவர் ஏறி குதித்து ஜன்னல் வழியாக படுக்கையறை எட்டி பார்த்திருக்கிறார். அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த உரிமையாளர் இந்த சம்பவம் குறித்து பக்கத்து வீட்டில் இருப்பவர்களிடம் கூறியுள்ளார். இதனால் அவர்களும் தங்கள் வீடுகளில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் 3 பேர் வீட்டு படுக்கை அறைகளை அந்த மர்ம நபர் எட்டி பார்த்தது தெரிய வந்தது. இதையடுத்து குடியிருப்பு வாசிகள் சார்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் வலம் வந்து படுக்கையறையை எட்டி பார்க்கும் மர்ம ஆசாமியால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Also Read: கொதிக்கும் நீரில் தவறி விழுந்த 2 வயது குழந்தை..! உடல் வெந்து பரிதாப பலி..!