4 பேர் கொண்ட கும்பல் இளம் பெண்ணை காரில் கடத்தி கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள சிறுமிகள் தங்கும் விடுதியில் சிறுமிகள் பலர் பலவந்தமாக கற்பழிக்கப்பட்ட சம்பவம் கடந்த வருஷம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீஸ் நடவடிக்கைக்கு பின் மீட்கப்பட்ட சிறுமிகள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பாதிக்கப்பட்ட சிறுமிகள் மறு வாழ்வுக்காக அவர்கள் மீண்டும் குடும்பத்தினருடன் அனுப்பப்பட்டனர்.

அப்படி குடும்பத்தினருடன் சேர்ந்த 14 மாதங்களுக்கு பின், தற்போது மீண்டும் இளம் பெண் ஒருவர் பாலியல் வன் கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளார். 18 வயதான அந்த இளம்பெண் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கு சம்பரன் மாவட்டத்துக்குட்பட்ட பேட்டை டவுன் போலீஸ் நிலைய பகுதியை சேர்ந்த அந்த பெண்,கடந்த வெள்ளிக்கிழமை மாலை உறவினரை பார்ப்பதற்காக நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை 4 பேர் வழிமறித்து தாக்கி உள்ளனர். பின்னர் அந்த கும்பல் இளம் பெண்ணை காரில் கடத்தி சென்ற அந்த கும்பல் அந்த பெண்ணை மாறி மாறி கற்பழித்துள்ளனர்.

இதனால், அந்த இளம்பெண் மயக்கம் அடைந்துள்ளார், பயந்துபோன அந்த பெண்ணை  வீட்டருகே விட்டுச் சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் பேட்டை டவுன் போலீசில் புகார் அளித்தனர்.

இந்த புகார் மகளிர் போலீஸ் விசாரணைக்கு அனுப்பப்பட்டது. விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த ஆகாஷ் குமார், ராஜ்குமார், தினத்குமார் மற்றும் குந்தன் குமார் ஆகிய 4 பேர் இளம் பெண்ணை கடத்தி கற்பழித்தது தெரிய வந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த பேட்டை டவுன் போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள்.

பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பேட்டை பகுதி குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் மம்தாஜா என்பவர் கூறுகையில், பாதிக்கப்பட்ட இளம்பெண் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் மீண்டும் குடும்பத்தினருடன் இணைந்து வாழ்ந்து வந்தார். சிறிது, சிறிதாக மறுவாழ்வை தொடங்கிய நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது என்றார்.