கோவையில் உள்ள முத்தூட் மினி பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் 812 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கோவை ராமநாதபுரத்தில் முத்தூட் மினி என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் ஏராளமானோர் நகைகளை அடமானம் வைத்துள்ளனர். நேற்று சனிக்கிழமை என்பதால், இரண்டு பெண்கள் மற்றும் பணியில் இருந்துள்ளனர். திடீரென முகமூடி அணிந்து உள்ள நுழைந்த நபர்கள் 2 பெண்களை தாக்கி அங்கிருந்து சுமார் 812 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளார். 

இதனையடுத்து உடனே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் 2 பெண்களிடம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் விசாரணையில் அவர்கள் இரண்டு பெண் ஊழியர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்து வருவதாக கூறப்படுகிறது. குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் தரப்பில் 4 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். 

நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தான் நகைகளுடன் மாயமாகி இருப்பதாக அவர்களது புகாரில் கூறப்பட்டுள்ளது. எனவே அந்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் சனிக்கிழமை நண்பகலில் மூடப்பட்ட நிறுவனம், திங்கட்கிழமை தான் திறக்கப்படும் என்ற சூழலில், ஞாயிற்றுக்கிழமை அன்று நகைகள் மாயமானது கண்டுபிடிக்கப்பட்டது எப்படி என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் தரப்பில் 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.