கேரளத்தைச் சேர்ந்த பிரபல வயலினிஸ்ட் பால பாஸ்கர் கார்விபத்தில் மரணமடைந்த விவகாரத்தில் விசாரணை தொடர்ந்து நடடஙகு கொண்டிருக்கும் நேரத்தில் சினிமா காட்சிகளை மிஞ்சும் விதத்தில் அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. 

கடந்த 2018 செப்டம்பர் 25 ம் தேதி.காரில் பாலபாஸ்கர்,அவரது மனைவி விஜயலட்சுமி இரண்டு வயது மகள் தேஜஸ்வி பாலா ,அர்ஜூன்,என்று இரு நண்பர்களும் இருந்திருக்கின்றனர். விபத்தில் குழந்தை அதே இடத்தில் இறந்து விட மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பாலபாஸ்கர் சிகிச்சை பலனளிக்காமல் அக்டோபர் 2 ம் தேதி இறந்து போனார். அர்ஜூனும், பாலபாஸ்கர் மனைவி விஜயலட்சுமியும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர்
 
சாலகுடியிலிருந்து கொல்லம் 200 கி.மீ .இந்தத் தூரத்தை சுமார் 2 அரை மணி நேரத்தில் கடந்திருக்கிறது அவர்கள் பயணித்த கார். வழியில் இருக்கும் சிசிடிவி கேமராவில் காரை அர்ஜூன் ஓட்டியது பதிவாகி இருக்கிறது. விபத்து நடந்தபோது காரை ஓட்டியது பால பாஸ்கரா? அர்ஜூனா?இது விபத்தா? கொலையா? என்று போலீசார் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் புதுப்புது  அதிர்ச்சி தரும் அடுத்தடுத்த திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

அதவாது பாலபாஸ்கரின் நெருங்கிய நண்பரும் இப்போது தங்கம் கடத்திய வழக்கில் சிறையில் இருப்பவருமான பிரகாசன் தம்பி, விபத்து நடந்த தினத்தில் கொல்லத்தில் ஒரு சாலையோர கடையில் பால பாஸ்கர் குடும்பத்துடன்  பேசிக்கொண்டு இருக்கும் சிசிடிவி காட்சிகள் கிடைத்திருக்கின்றன. 
 
தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்பு உடையவர் என்று சந்தேகிக்கப்படுபவர் பாலக்காடு செர்புலசேரியைச் சேர்ந்த ரவீந்திரன். இவர் ஒரு ஆயுர் வேத மருத்துவமனை நடத்தி வருகிறார். இவருடைய மகன் ஜிஸ்னுவுக்கும், பாலபாஸ்கருக்கும் நீண்டகால நட்பு இருந்ததாகவும் இந்த சம்பத்துக்கு சில நாட்களுக்கு முன்பாக  தகராறுகள் ஏற்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த ரவீந்தரனின் நெருங்கிய உறவினர்தான் விபத்தில் உடனிருந்த அர்ஜூன். விபத்து நடந்தபோது காரை ஓட்டியது பால பாஸ்கர் தான் என்று இவர் சொல்லிவந்த நிலையில், தற்போது கலாபவன் ஷோபி விபத்து நடந்த சமையத்தில் தான் அந்த வழியே வந்ததாகவும், அங்கே நின்றவர்கள் தன்னை அருகில் காரை நிறுத்த அனுமதிக்கவில்லை, என்றும், விபத்து நடந்த பிறகு அங்கே தயாராக காத்திருந்த யாரோ பாலபாஸ்கரை. தூக்கி டிரைவர் சீட்டில் உட்கார வைத்து விட்டு போலீசை அழைத்திருக்கலாம் என்று அந்தர் பல்டி அடித்துள்ளார்.


 
இது இப்படி இருக்க, திடீர்  திருப்பமாக காரில் பயணம் செய்த அர்ஜூனைக் காணவில்லை என்கிறது போலீஸ் வட்டாரம். இன்னும் காயங்கள் ஆறாத நிலையில், அர்ஜூன் எங்கே போயிருப்பார்? என்று போலீசார் மீண்டும் விசாரணையை முடிக்கிவிட, அவரது தந்தையிடம் விசாரித்ததில் மகன் ஜிஸ்னுவுடன், வடகிழக்கு மாநிலங்களுக்கு டூர் போயிருப்பதாக ரவீந்திரன் கூறி இருக்கிறார். ஆனாலும், அதை நம்பாத போலீசார் அர்ஜூன், ஜிஸ்னு இருவரின் மொபைல் எண்களை கண்காணித்து வருகிறார்கள்.