Asianet News TamilAsianet News Tamil

YearEnder 2022: 2022ல் தமிழகத்தையே அதிர வைத்த கொலைகள்.. ஈரக் குலையை நடுங்க வைத்த கொலைகள் பட்டியல்..!

2022ஆம் ஆண்டு முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தமிழ்நாட்டையே அதிர வைத்த கொடூர கொலைகள் குறித்து ஒரு கண்ணோட்டம் பார்ப்போம். 

Murders that shocked Tamil Nadu in 2022
Author
First Published Dec 21, 2022, 3:23 PM IST

2022ஆம் ஆண்டு முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தமிழ்நாட்டையே அதிர வைத்த கொடூர கொலைகள் குறித்து ஒரு கண்ணோட்டம் பார்ப்போம். 

* சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் ஆடிட்டர் ஸ்ரீகாந்த் (60). இவருடைய மனைவி அனுராதா (55). இவர்கள் மார்ச் மாதம் அமெரிக்காவிலுள்ள மகள் சுனந்தாவின் வீட்டிற்கு சென்றுவிட்டு சென்னை திரும்பி நிலையில் இருவரும் கொடூரமாக கொலை செய்து நெமிலிச்சேரி அருகே உள்ள பண்ணை வீட்டில் புதைக்கப்பட்டது. 

* சென்னை ஆதம்பாக்கம் காவலர் குடியிருப்பை சேர்ந்த மகள் சத்யா (20). ஒரு தலைக்காதல் விவகாரத்தால் ரயில் முன் தள்ளி கொலை

* சென்னை அமைந்தகரையில் பட்டப்பகலில் பைனான்சியர் ஆறுமுகம் பொதுமக்கள் மத்தியில் 6 பேர் கொண்ட கும்பலால் நடுரோட்டில் ஓட ஓட விரட்டி படுகொலை.

*  சென்னை ஆதம்பாக்கம் தொழிலதிபர் பாஸ்கரன் பெண்களுடன் உல்லாசமாக இருக்க சென்ற இடத்தில் ஏற்பட்ட தகராறில் அடித்து கொலை 

*  வேளாங்கண்ணி பைனான்சியர் டி.வி.ஆர்.மனோகர் அலுவலகத்தில் புகுந்து மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி படுகொலை

*  சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி சுரேஷ் என்ற கருக்கா சுரேஷ்(45). மனைவி கண்முன்னே துடிக்கதுடிக்க சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை

*  திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த அறையூர் ஊராட்சி மன்றத்தலைவர் பன்னீர்செல்வம் கொலை

*  காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அடுத்த மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக வெங்கடேசன் பெட்ரோல் குண்டு வீசி சரமாரி வெட்டிப்படுகொலை

*  திருப்பூர் மாவட்டத்தில் சொத்துக்களை விற்று ஊதாரித்தனமாக செலவு செய்த மகனை கூலிப்படை வைத்து கொலை செய்த தந்தை

*  தூத்துக்குடியில் மின்வாரிய அலுவலகத்தில் புகுந்து ஊழியர் வெட்டி படுகொலை 

*  திருவாரூர் மாவட்டத்ததில் திருமணமாகி 5 நாட்கள் கூட ஆகாத நிலையில் விருந்துக்கு வந்த தனது சொந்த மருமகனை மாமனார் வெட்டிக் படுகொலை 

*  ஒரு தலைக்காதல் விவகாரத்தால் பட்டப்பகலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி ஸ்வேதா கழுத்தை அறுத்து கொலை

*  கஞ்சா விற்பனை குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுத்ததால் இரும்பு வியாபாரி ஓட ஒட விரட்டி படுகொலை

* சிவகங்கை அருகே ராமன் கண்மாயில் வெட்டி கொன்று விட்டு வெறி தீராததால் மர்ம கும்பல் தலையை மட்டும் வெட்டி கொலை

*  விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த கப்பியாம்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த பாமக மாவட்ட துணைத் தலைவர் ஆதித்தன் கொலை

*  நெல்லையில் வேறு சமூகத்தை சேர்ந்தவரை காதலித்த மகள் அருணாவை  கழுத்தை நெரித்து கொலை செய்த பெற்ற தாய்

*  மதுரையில் மது குடித்துவிட்டு தகராறு செய்த மகனை தந்தையே கத்தியால் நெஞ்சை குத்தி கிழித்து கொலை 

*  அரியலூர் அருகே இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி குறித்து அவதூறாக பேசியதாக நண்பன் படுகொலை 

*  கூடுவாஞ்சேரியில் மனைவி, மாமியார் காலில் விழுந்து கெஞ்சியும் அவர்கள் கண்ணெதிரே பிரபல ரவுடி சந்துரு துடிதுடிக்க வெட்டி கொலை 

*  குப்பை தொட்டியில் கை, சாக்கடையில் கால், பாழடைந்த கிணற்றில் தலை, குடிநீர் கிணற்றில் உடல் என கோவையில் அங்காங்கே கிடைத்த மனித உடல் பாகங்கள் அனைத்தும் கொடூரமாக கொல்லப்பட்ட அழகு நிலைய கலைஞர்  பிரபு

*  நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய கொமதேக இளைஞரணி அமைப்பாளர் கவுதம் கொலை

*  மணிமங்கலம் காவல் நிலையம் அருகே நான்கு பேர் கொண்ட கும்பலால் சுரேந்திரன், விக்கி ஆகியோர் 2 பேர் வெட்டி படுகொலை 

* சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கு நண்பர்களுடன் நடைபயணம் சென்ற கல்லூரி மாணவனை மர்ம கும்பல்  அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை 

*  கள்ளக்காதல் விவகாரத்தில் கூலிப்படை ஏவி காதல் கணவர் கொலை செய்துவிட்டு நகைக்காக கொலை நடந்ததாக நாடகமாடிய மனைவி

*  மயிலாடுதுறையில் முன்னாள் வன்னியர் சங்க நிர்வாகி 12 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை 

*  விழுப்புரம் அருகே திமுக பிரமுகர் ஜெயக்குமார்  ஓட ஓட விரட்டி படுகொலை 

*  திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுமாப்பிள்ளை நள்ளிரவில் சரமாரியாக வெட்டி படுகொலை.

*  மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே திமுக பிரமுகர் பாலாஜி கொலை செய்து உடலை சாக்கு மூட்டைக்குள் கட்டி கிணற்றுக்குள் வீசியது

*  நாகர்கோவிலில் கள்ளக்காதலை துண்டித்ததால் இஎஸ்ஐ மருந்தகத்தில் பணியாற்றும் ஊழியரை பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியை  ஒருவர் 40க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை 

* தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே நாடார் மக்கள் இயக்கத்தின் மாநில செயலாளர் சரவணகுமார் என்பவர் வெட்டி படுகொலை

*  சேலம் மாவட்டத்தில் காதலிக்க மறுத்ததால் கல்லூரி மாணவி ரோஜா தலையில் கல்லை போட்டு கொலை

*  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காதல், கலப்பு திருமணம் செய்து கொண்ட புதுமாப்பிள்ளையை ஓட ஓட விரட்டி சென்று படுகொலை

*  சென்னை மடிப்பாக்கத்தில் திமுக வட்டச்செயலாளர் செல்வம்  படுகொலை 

* மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் தீவிர ஆதரவாளரான பாஜக எஸ்.சி. பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவர் பாலசந்தர் போலீஸ் பாதுகாப்பையும் மீறி வெட்டி படுகொலை

* திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன்  10 பேர் கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை

Follow Us:
Download App:
  • android
  • ios