எவ்வளவோ சொல்லியும் அடங்காத மனைவி.. கள்ளக் காதலனுடன் சேர்த்து தீர்த்துக் கட்டிய கணவன்.

அப்போது மறைத்து வைத்திருந்த ஸ்க்ரூட்ரைவரால் யஸ்வந்தை வயிறு மற்றும் தொண்டையில் சரமாரியாக குத்தினார். அதே நேரத்தில் ஜோதியையும் சரமாரியாக குத்தி கொலை செய்தார்.  பின்னர் அங்கிருந்து விஜயவாடாவுக்கு தப்பிச் சென்றார். பின்னர் அழுகிய நிலையில் இருவருடைய உடலும் கடந்த செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. 

Murder wife and her boy friend at andrapradesh- police arrest husband.

மனைவி திருமணத்துக்கு புறம்பான உறவில் ஈடுபட்டு வந்த நிலையில்  மனைவி மற்றும் கள்ளக்காதலனை கணவன் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த வழக்கில் போலீசார் குற்றவாளியான கணவனைக் கைது செய்துள்ளனர்.

திரும்பிய பக்க மெல்லாம் கள்ளக்காதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதனால் தற்கொலை மற்றும் உயிரிழப்புகள் தொடர்கதையாகி வருகிறது. ஹைதராபாத் அப்துல்லாபூர்மீத் வரிசிகூடா பகுதியை சேர்ந்தவர்  ஸ்ரீனிவாச ராவ்-ஜோதி இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த யட்லா எஸ்வந்த் என்ற கார் ஓட்டுநரை சந்தித்தார். அவர்களுக்கு இடையேயான நட்பு காதலாக மாறியது. இதுதொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. யஸ்வந்தை விட்டு பிரியும்படி ஜோதிக்கு பலமுறை கணவர் எச்சரித்தார். ஆனால் யஸ்வந்தை விட்டு தன்னால் பிரிய முடியாது என ஜோதி திட்டவட்டமாகக் கூறினார். இதனால் இருவரையும் கொல்ல ஸ்ரீனிவாச ராவ் முடிவு செய்தார்.

Murder wife and her boy friend at andrapradesh- police arrest husband.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவர்கள் இருவரையும் தீர்த்துக் கட்ட முடிவு செய்தார். முன்னதாக ஜோதியை அழைத்து அன்பாகப் பேசிய ஸ்ரீனிவாச ராவ், யஸ்வந்த் உண்மையிலேயே நல்ல மனிதர், அவருடன் உறவைத் தொடர்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறியதுடன், தன்னை முழுமையாக நம்புவதாக மனைவியிடம் கூறினார். இந்நிலையில் ஞாயிறு இரவு 7 மணிக்கு  ஜோதி, யஸ்வந்துக்கு போன் செய்தார் அவரிடம் நடந்த வற்றை ஜோதி கூறினார், இதனால் மூவரும் புறநகர் பகுதிக்கு போகலாம் என்று யஸ்வந்த் அழைத்தார்,  இந்நிலையில் சீனிவாசராவ் தனது சகோதரருடன் இருசக்கர வாகனத்தில் ஜோதியை பின்தொடர்ந்தார். ஒரு செருப்பு கடைக்கு சென்று அங்கு புதிய செருப்புகளை ஜோதி வாங்கினார். அதற்கு ஸ்ரீனிவாச ராவ் இடம் 5 ஆயிரம் ரூபாய் கூகுள் பே மூலம் பெற்றார். 

பின்னர் கள்ளக்காதலன் யஸ்வந்துடன் ஜோதி இருசக்கர வாகனத்தில் விஜயவாடா தேசிய நெடுஞ்சாலை நோக்கி சென்றார். அக்காட்சிகள் அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்நிலையில் மதுபானம் மற்றும் குளிர்பானங்கள் வாங்கினர். அத்துடன் ஒரு பிளாஸ்டிக் பை எல்இடி டார்ச் லைட் மற்றும் 3 பவர் பேக்குகளை எடுத்துக்கொண்டு புறநகர் பகுதிக்கு சென்றனர். அங்கே இரவைக் கழிக்க எண்ணினர். அங்கிருந்து அவர்கள் மூவரும் கோட்டேகுடோம் புறநகர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய வெறிச்சோடிய பகுதிக்கு சென்றனர். அங்கு யஸ்வந்தும் சீனிவாச ராவ் ஆகியோர் மது அருந்தினர். பின்னர் யஸ்வந்தும் ஜோதியும் தனியாக நேரத்தை செலவிட சிறிது தூரம் சென்றனர். அங்கு இருவரும் தனியாக இருந்தபோது சீனிவாசராவ் பின்னாலிருந்து கல்லால் யஸ்வந்தை தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே யஸ்வந்த் உயிரிழந்தார்.

Murder wife and her boy friend at andrapradesh- police arrest husband.

அப்போது மறைத்து வைத்திருந்த ஸ்க்ரூட்ரைவரால் யஸ்வந்தை வயிறு மற்றும் தொண்டையில் சரமாரியாக குத்தினார். அதே நேரத்தில் ஜோதியையும் சரமாரியாக குத்தி கொலை செய்தார்.  பின்னர் அங்கிருந்து விஜயவாடாவுக்கு தப்பிச் சென்றார். பின்னர் அழுகிய நிலையில் இருவருடைய உடலும் கடந்த செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. இந்நிலையில் அந்தப் பெண் சீனிவாசராவ் மனைவி என்பது தெரியவந்தது, மனைவி காணாமல் போய் இரண்டு நாட்கள் ஆகியும் அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்காததால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளும் போலீசாருக்கு கிடைத்தது.  அந்தப் பெண்ணின் செல்போனில் கூகுள்பே மூலம் 5000 ஆயிரம் ரூபாய் அனுப்பி இருந்ததையும் வைத்து போலீசார் ஆராய்ந்தனர் பின்னர் சீனிவாசராவை கைதி செய்தனர். சீனிவாசராவ் தனது மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை கொலைசெய்ததை  ஒப்புக்கொண்டார். இதில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios