முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கொடைக்கானலில் வைத்து கொலை செய்யப் போவதாக மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்போன் அழைப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை செல்போனில் தொடர்புகொண்ட மர்ம நபர் ஒருவர், “முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமியை கொடைக்கானலில் வைத்து கொலை செய்யப் போகிறேன் என்று மிரட்டல் விடுத்துவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மர்ம நபர் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இலங்கையில் கடந்த ஒருவாரமாக அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நிகழ்ந்து வரும் நிலையில், தமிழகத்தில் அப்படி ஒரு சம்பவம் நடக்காமல் தடுக்க, மாநிலம் முழுவதும் மக்கள் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதுபோலவே முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவமும்,யாரேனும் விளம்பரத்திற்காக செய்திருப்பார்களோ என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.