குடும்ப பிரச்சனை காரணமாக குழந்தையின்  கண்முன்னே தாயை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடரபாக கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீருமேடு அருகே சந்திரவனம் பிரியதர்ஷினி காலனியை சேர்ந்தவர் ராஜா(30).  இவர்களுக்கு 6 வயதில் மகள் ஒன்று உள்ளது. இந்த தம்பதிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இதேபோல், சம்பவத்தன்றும் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்படுள்ளது. இதனால், ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற ராஜா. திடீரென அரிவாளால் மனைவி ராஜலட்சுமியின் கழுத்தை அறுத்துள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த ராஜலட்சுமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். 

இதுதொடர்பாக உடனே சந்திரவனம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராஜலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான ராஜாவை தேடி வந்தனர். 

இந்நிலையில், தலைமறைவாக இருந்த ராஜாவை போலீசார் நேற்று கைது செய்தனர். இதனையடுத்து, போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் ராஜலட்சுமி ஏற்கனவே திருமணமானவர். அதன்படி முதல் கணவர் மகளை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு விட்டு விட்டு ராஜாவுடன் வந்து குடும்பம் நடத்தியுள்ளார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளார். கொலை நடந்த நேரத்தில் மகளும் வீட்டில் தான் இருந்தான். 6 வயது மகளின் கண்முன்னே  மனைவியை கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் கொன்ற ராஜாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.