நண்பனின் கள்ளக் காதலிக்கு பிராக்கிட்.. தனிமையில் அடிக்கடி உல்லாசம்.. கும்மிருட்டில் குளத்து கரையில் பயங்கரம்.
கள்ளக் காதலியுடன் உல்லாசத்தில் ஈடுபட்ட நண்பனை கள்ளக் காதலன் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சித்தூர் மாவட்டத்தில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது
.
கள்ளக் காதலியுடன் உல்லாசத்தில் ஈடுபட்ட நண்பனை கள்ளக் காதலன் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சித்தூர் மாவட்டத்தில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அறிவியல் நாகரிகம் வளர வளர சமூகத்தில் கலாச்சார சீரழிவு அதனால் ஏற்படும் குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில் நண்பனின் கள்ளக் காதலியுடன் உடலுறவில் ஈடுபட்டு வந்த இளைஞன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். அதாவது கொலை நடந்து ஓராண்டு கழித்தே போலீசார் இந்த வழக்கில் துப்பு துலக்கி உள்ளனர். சித்தூர் மாவட்டம் வீகோட்டா பகுதியைச் சேர்ந்தவர் ஷெரிப், இவரின் மகன் இஸ்மாயில் (23) எலக்ட்ரீசியனாக இருந்து வந்தார். இவருக்கு வீ கோட்டா நகரிலுள்ள நாராயண நகரைச் சேர்ந்த நரேஷ் என்பவரும் நண்பர்களாக இருந்தனர். அவர்களுக்குள் நட்பு ஏற்பட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு இஸ்மாயில் பெங்களூருக்கு குடிபெயர்ந்தார். அங்கு தனது உறவினர்களுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் நரேஷ் அதே ஊரைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணத்துக்கு புறம்பான தொடர்பு வைத்திருந்தார். ஆனால் இதை அவரது குடும்பத்தினர் கண்டித்ததால் அவர்களுடன் தகராறில் ஈடுபட்ட அவர், அந்தப் பெண்ணுடன் தங்கி வந்தார். இந்நிலையில்தான் பெங்களூரில் இருந்த நண்பர் இஸ்மாயில் அடிக்கடி தனது நண்பரை சந்திக்க வந்தார், அப்போது நரேஷின் கள்ளத் காதலியுடன் இஸ்மாயிலுக்கு நெருக்கம் ஏற்பட்டது. நரேஷ் இல்லாத நேரங்களில் அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்வதை இஸ்மாயில் வழக்கமாக வைத்திருந்தார். தனிமையில் இஸ்மாயில் அந்தப் பெண்ணுடன் உல்லாசத்தில் ஈடுபட்டு வந்தார். ஒரு கட்டத்தில் இந்த விஷயம் நரேசுக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த நரேஷ் தனது நண்பர் இஸ்மாயிலை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.
5-1-2001 அன்று இஸ்மாயில் நரேசிடன் கடன் வாங்கிய பணத்தை திருப்பி தருமாறு கேட்டார், அன்று மாலை பிகோட்டாவுக்கு வந்த இஸ்மாயில் நரேஷ்க்கு போன் செய்தார். அப்போது இரவு 8 மணி அளவில் இருவரும் சேர்ந்து மது அருந்தினார். பின்னர் அங்கிருந்து வீ கோட்டாவில் உள்ள குலத்துக்கு சென்றனர். அங்கு இருவருக்கும் இடையே கள்ளக் காதலி தொடர்பான வாக்குவாதம் ஏற்பட்டது, அப்போது நரேஷ் இஸ்மாயிலின் தலையில் மது பாட்டிலால் தாக்கி கொலை செய்தார். இதில் சம்பவ இடத்திலேயே இஸ்மாயில் உயிரிழந்தார். அதை உறுதி செய்துகொண்ட நரேஷ், இஸ்மாயிலின் உடலை மணலில் குழி தோண்டி புதைத்தார். பின்னர் மாடு மேய்ப்பவர்கள் மூலம் அங்கு சடலம் புதைக்கப்பட்டது தெரியவந்தது. அதேநேரத்தில் இறந்தவரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது இஸ்மாயிலின் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் திங்கட்கிழமை போலீசாரிடம் நரேஷ் தான் இஸ்மாயிலை அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இந்நிலையில் போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் இஸ்மாயில் புதைக்கப்பட்ட இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். குளத்தில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் உடலை மீட்க முடியவில்லை என் தாசில்தார் உள்ளிட்டோர் தெரிவித்தனர். கள்ளக் காதலிக்காக நண்பன் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் சித்தூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.