அப்போது 2 மணியளவில் அம்சநந்தினி அருகே இருந்த குழந்தை திடீரென காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறி கூச்சலிட்டார். வீட்டில் அனைத்து இடங்களிலும் தேடியுள்ளனர். பின்னர் வீட்டின் குளியலறையில் பெயிண்ட் பக்கெட்டில் உள்ள நீரில் குழந்தை தலைகீழாக இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அரக்கோணம் அருகே பிறந்து 40 நாட்களே ஆன ஆண்குழந்தை பெயிண்ட் பக்கெட் நீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தோல்ஷாப் பகுதியை சேர்ந்த மனோ(22). இவர் சென்னை திருநின்றவூரில் உள்ள பூக்கடை ஒன்றில் மாலை கட்டும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அம்சநந்தினி( 20). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அம்சா நந்தினிக்கு கடந்த 40 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. நள்ளிரவு குழந்தை யுவனுக்கு அம்சா நந்தினி பால் கொடுத்து விட்டு, குழந்தை மற்றும் மாமியார் கீதாவுடன் தரையில் படுத்து தூங்கியுள்ளார். 

அப்போது 2 மணியளவில் அம்சநந்தினி அருகே இருந்த குழந்தை திடீரென காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறி கூச்சலிட்டார். வீட்டில் அனைத்து இடங்களிலும் தேடியுள்ளனர். பின்னர் வீட்டின் குளியலறையில் பெயிண்ட் பக்கெட்டில் உள்ள நீரில் குழந்தை தலைகீழாக இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தையை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அவரது குழந்தையின் தந்தை முன்னுக்கு பின் முரணாக வகையில் பேசியுள்ளார். இதனையடுத்து, போலீசார் பாணியில் விசாரணை நடத்தியதில் குழந்தையை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். 

இதுதொடர்பாக அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் மனைவி ஆசைக்கு இணங்க மறுத்ததால் பச்சிளம் குழந்தையை கொன்றேன் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிறந்து 40 நாட்களே ஆன ஆண்குழந்தை பெயிண்ட் பக்கெட் நீரில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.