படுக்கை அறையில் கணவனை சரமாரியாகக் குத்திக்கொன்றுவிட்டு, தற்கொலை என்று நாடகமாடிய மனைவியை போலீசார் அதிரடியாக கைது விசாரணை நடத்தி வருகின்றனர். 

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள நல்லோஸ்பரா பகுதியில் வசித்து வந்தவர் சுனில் கடம் (36). இவரின் மனைவி ப்ரனாளி (33). இந்தத் தம்பதிக்குக் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்து 7 மற்றும் 2 வயதில் இரு மகள்கள் உள்ளனர். சுனில் தன் மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் வசித்துவந்தார். இந்நிலையில், சுனில் என்பவருக்கு அலுவலகத்தில் பணிபுரியும் மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. 

 

இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். வழக்கம் போல நேற்று முன்தினமும் சண்டை வலுத்துள்ளது. ஆத்தரமடைந்த மனைவி ப்ரனாளி கொன்றுவிட முடிவு செய்தார். வாக்குவாதத்துக்குப் பிறகு சுனில் தூங்கச் சென்றுள்ளார். மனைவி ப்ரனாளி சமையல் அறைக்குள் இருந்த கத்தியை எடுத்துக்கொண்டு படுக்கை அறைக்குள் வந்துள்ளார். அப்போது, தூங்கிக்கொண்டிருந்த சுனில் கழுத்து மற்றும் வயிற்றில் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.  

இதனையடுத்து, எதுவும் நடக்காததுபோல் வெளியில் வந்து கதறியபடி அவரின் பெற்றோரிடம் சென்று தன்னைத் தானே கத்தியால் குத்திக்கொண்டு சுனில் தற்கொலை செய்துகொண்டதாக கூறினார். பின்னர், இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

போலீசார் விசாரணையில் தற்கொலை செய்பவர் எப்படி உடலில் 11 இடங்களில் கத்திக் குத்து விழுந்திருக்கும் என சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து, மனைவியிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் முதலில் தன் கணவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி நாடகமாடிய ப்ரனாளி, பின்னர் விசாரணையில் சிக்கிக்கொண்டார். அப்போது அவர், தான் சுனிலைக் கொன்றதை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த போலீசார், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.