காதல் கல்யாணம் செய்த கணவரை 11 முறை வெட்டி, கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் மனைவி வெறித்தனமாக கொன்று நாடகமாடிய இந்த சம்பவம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

நல்லசோப்ரா பகுதியில் வசித்து வரும் தம்பதி சுனில் கதம் - ப்ரனாலி. ஒருத்தருக்கொருத்தர் உயிருக்குயிராக காதலித்தவர்கள். கடந்த 2011ம் வருஷம் இருவரும் கல்யாணம் செய்து கொண்டனர், இவர்களின் காதல் வாழ்க்கைக்கு அடையாளமாக 2 மகள்கள் இருக்கிறார்கள். 

சந்தோஷமான இவர்களின் வாழ்க்கையில் கடந்த சில மாதங்களாக இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டையும், தகராறும் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம்  வழக்கம் போல தொடங்கிய இந்த சண்டை நேற்று விடிகாலை 5 மணி வரை நீடித்துள்ளது. இருவரும் தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டு பயங்கரமான சண்டை வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மனைவி, தண்ணீர் எடுத்து வருகிறேன் என்று சொல்லி, விட்டு கிச்சனுக்குள் நுழைந்து அங்கே காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து கண்ணிமைக்கும் நேரத்தில் கணவரை சரமாரியாக வெட்டினார். தொடர்ச்சியாக கத்தியால் 11 முறை கணவரை வெட்டினார். அப்பவும் ஆவேசம் அடங்கவில்லை. 

அதனால், கணவனை கட்டி அணைத்து பிடித்துக் கொண்டு கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டார். பிறகு, மாமனார், மாமியாரிடம் கணவன் தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார். ஆனால் அவர்கள் மருமகள் பேச்சை நம்பவே இல்லை. அதனால் மகனின் கொலையில் சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம்  சொல்ல, போலீசாரும் சுனிலின் உடல் போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைக்கப்பட்டது. அப்போதுதான் மனைவியின் குட்டு வெளிப்பட்டது. இதையடுத்து, கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் கணவனை ஆத்திரத்தில் கொலை செய்துவிட்டதாக ஒப்புக் கொண்டுள்ளார்.