வீட்டில் காதலனுடன் தனியாக இருக்கும்போது திடீரென தாய் வந்ததால், பதற்றத்தில் சிறுமி எடுத்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மும்பை, குர்லா பகுதியில் உள்ள பஜார் பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றின் முதல் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவ தினமான கடந்த வெள்ளிக்கிழமை அன்று சிறுமி தனியாக இருப்பதை அறிந்து அவரது 20 வயது காதலன் சுனில்  அவருடைய வீட்டிற்கு வந்துள்ளார். இருவரும் வீட்டில் தனிமையில் இருந்துள்ளனர். அப்போது திடீரென சிறுமியின் அம்மா வீட்டிற்கு வந்துள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமி வீட்டின் முதல் மாடியில் இருந்து  கீழே குதித்து விட்டார். இதில் சிறுமியின் கால் உடைந்து விட்டது. தொடர்ந்து இதுகுறித்து வீட்டினர் விசாரித்தபோது தான் உண்மை தெரிய வந்துள்ளது. இதையடுத்து சிறுமியின் வீட்டினர் காவல் நிலையத்தில் புகாரளிக்க சிறுமியின் காதலன் மீது போலீசார் அத்துமீறி வீட்டுக்குள் நுழைதல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.