Asianet News TamilAsianet News Tamil

Madurai Crime News: ஜாமீனில் வந்த இளைஞர் சரமாரியாக வெட்டி படுகொலை.. கைது செய்யப்பட்டவர்கள் பகீர் தகவல்..!

மதுரை மாவட்டம் சமயநல்லூரை அடுத்துள்ள பரவை பகுதியில் மீனாட்சி நகர் 5வது தெருவில் இளைஞர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

mudurai Youth Murder Case...2 people Arrest tvk
Author
First Published Nov 18, 2023, 7:08 AM IST | Last Updated Nov 18, 2023, 7:15 AM IST

மதுரையில் ஜாமீனில் வந்த இளைஞர் நள்ளிரவில் சரமாரியாக வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் சமயநல்லூரை அடுத்துள்ள பரவை பகுதியில் மீனாட்சி நகர் 5வது தெருவில் இளைஞர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க;- நைட்டானாவே ஃபுல் மப்பிள் டார்ச்சர்.. அதுக்கு மறுத்த மனைவி.. அடம் பிடித்த கணவர்! மர்ம உறுப்பில் அடித்து கொலை.!

இந்த கொலை சம்பவம் தொடர்பாகபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கொலை செய்யப்பட்டவர் மதுரை தத்தனேரியைச் சேர்ந்த ராம்குமார் (25) என்பது தெரியவந்தது.  சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்ட வழக்கில் கடந்த ஜூலை மாதம் கைது செய்திருந்த நிலையில், தற்போது ஜாமீனில் வந்திருந்தார்.

இதையும் படிங்க;-  ஹவுஸ் ஓனர் மனைவியை கரெக்ட் செய்த யோகா மாஸ்டர்! உல்லாசத்துக்காக கணவனை கொன்ற 2வது மனைவி!சிக்கியது எப்படி?

இந்நிலையில் அவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்துள்ளனர். கொலை தொடர்பாக அப்பகுதியில் சந்தேகத்தின் பேரில் சுற்றிதிரிந்த இருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், இருவரும் ராம்குமாரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதுதொடர்பாக போலீசாரிடம் குற்றவாளிகள் கூறுகையில் ராம்குமாரிடம் மது கேட்டதாகவும், அவர் பணம் கேட்கவே, இரண்டு நாட்கள் கழித்து தருவதாக கூறியதால், வாக்குவாதம் ஏற்பட்டு கத்தியால் சரமாரி வெட்டிக் கொலை செய்ததாக கூறியுள்ளனர். இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios