கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம், கொள்ளேகால் தாலுக்கா சிலுகலுபுரா கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சுண்டசாமி. இவரது மனைவி சாக்கம்மா. இவர்களுக்கு மகாதேவன் பிரபு  மகன் இருந்தார்.  இந்த சிரம் அதே ஊரில்  2-ஆம் வகுப்பு படித்து வந்தார். 

இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த பிரபு விளையாடுவதற்காக வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி  வாராததால் அதிர்ச்சியான   அந்த சிறுவனின் தந்தை  பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதையடுத்து கொள்ளேகால் போலீஸில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீஸார் சிறுவனை தேடி வந்தனர். அப்போது கடந்த 10-ஆம் தேதி அந்த கிராமத்தில் உள்ள ஏரியில் ஒரு சிறுவனின் சடலம் மிதப்பதாக கொள்ளேகால் போலீஸார் விரைந்து சென்று அந்த சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர்.  இதில் அச்சிறுவன் நஞ்சுண்டசாமியின் மகன் என்பது தெரியவந்தது. சிறுவன் ஏரியில் தவறி விழுந்தாரா அல்லது யாராவது கொன்று வீசிவிட்டனரா என போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சிறுவனின் உடலில் காயம் இருந்ததால் அவரை யாரோ கொலை செய்துள்ளனர் என்பது போலீஸாருக்கு தெளிவாக தெரிந்தது.  

சிறுவனின் மரணம் குறித்து   போலீஸார் விசாரணை நடத்திய நிலையில் சிறுவனை அதே கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ மூர்த்தி என்பவர் மோட்டார் சைக்கிளில் வைத்து அழைத்து சென்றதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நாகராஜ மூர்த்தியிடம் போலீஸார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில்  முன்னுக்கு பின் முரணான பதில் அளித்தார்.  தொடர்ந்து நடத்தப்பட்ட  விசாரணையில்  வாக்குமூலத்தில் நஞ்சுண்டசாமியின் மனைவி சாக்கம்மாவுக்கு பக்கத்து வீட்டை சேர்ந்த நாகராஜமூர்த்தியுடன்  கள்ளக்காதல் ஏற்பட்டது.  

இந்த பழக்கத்தால் இருவரும்  அடிக்கடி தனிமையில் சந்தித்து  உல்லாசமாக இருந்துள்ளார்.   கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது பிரபு பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததால் இவர்களை பார்த்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் தங்கள் தொடர்பை நஞ்சுண்டசாமியிடம்  சொல்லிவிடுவானோ என்ற பயத்தில்  பிரபுவை கொலை செய்ய திட்டமிட்டு நாகராஜ மூர்த்தி தனது பைக்கில் அழைத்து சென்று ஏரியில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டுள்ளதாக விசாரணையில் கூறியிருக்கிறார்.