Asianet News TamilAsianet News Tamil

இரண்டு குழந்தைகளுக்கு தாய்.. ஏரியா புள்ளிங்ககூட ஃபுல் மப்பு.. பாழடைந்த வீட்டில் நடந்த பயங்கரம்.

அதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதனால் செய்வதறியாது திகைத்த அந்த இளைஞர்கள், கிர்ரெம்மாவின் உடலை யாருக்கும் தெரியாமல் எரித்துவிட முடிவு செய்தனர்.

Mother of two children .. releation with local boys .. Recovery of corpse in sack ..
Author
Chennai, First Published Aug 9, 2021, 6:51 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

தெலுங்கானா மாநிலம் மஹாபூப்நகர் மாவட்டம் நாரயணப்பேட்டை நகரில் இரண்டு இளைஞர்களுடன் சேர்ந்து மது அருந்திய 2 குழந்தைகளின் தாயை அந்த இளைஞர்கள் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதை தடுக்க காவல் துறையும், அரசும் எத்தனை நடவடிக்கைகளை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. அதே நேரத்தில் சில பெண்கள் தவறான நடத்தைகளால் தேவையில்லாத சிக்கல்களில் அகப்பட்டுக் கொள்வதுடன், தங்களது வாழ்க்கையே பறி கொடுக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டு விடுகின்றனர். அப்படியான சம்பவம்தான் ஒன்று தெலுங்கானா மாநிலம் மஹாபூப்நகரில் நடந்துள்ளது தெலங்கானா மாநிலம் மகபூப்நகர் நாராயண பேட்டை நகரைச் சேர்ந்தவர் கர்ரெம்மா, இவர் ஸ்கிராப் மெட்டல்  விற்று பிழைப்பு நடத்தி வந்தார். அந்தப் பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

Mother of two children .. releation with local boys .. Recovery of corpse in sack ..

ஆனாலும் அதே காலனியைச் சேர்ந்த நரேஷ் மற்றும் நாராயணன் என்ற இரண்டு இளைஞர்களுடன் கிர்ரெம்மா பழகி வந்தார். நாளடைவில் அவர்களுடன் மது அருந்துவது, அவர்களுடன் ஊர் சுற்றுவது என இருந்துவந்தார் அவர். இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி அந்தப் பெண்ணை நரேஷ் மற்றும் நாராயண் ஆகியோர் ஒக்கூர் மண்டலத்தில் உள்ள திப்ரஸ்பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றனர். பின்னர் மூவரும் சேர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது. பின்னர் அந்த இருவரும் கிர்ரெம்மாவுடன் உல்லாசமாக இருக்க முயன்றுள்ளனர். அப்போது மூவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு அது பின்னர் கைகலப்பாக மாறியது. ஒரு கட்டத்தில் மது போதையின் உச்சத்தில் இருந்த அந்த இளைஞர்கள் கிர்ரெம்மாவை மிகக் கடுமையாக தாக்கினர். 

Mother of two children .. releation with local boys .. Recovery of corpse in sack ..

அதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதனால் செய்வதறியாது திகைத்த அந்த இளைஞர்கள், கிர்ரெம்மாவின் உடலை யாருக்கும் தெரியாமல் எரித்துவிட முடிவு செய்தனர். அப்பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டிற்கு,  சடலத்தை தூக்கிச்சென்று எரிக்க முயற்சித்தனர். ஆனால் அந்த திட்டம் நிறைவேறவில்லை. இதனால் சடலத்தை ஒரு சாக்குமூட்டையில் கட்டி அங்குள்ள ஒரு பாலத்தின் கீழ் வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இரவு நீண்ட நேரம் ஆகியும் கிர்ரெம்மா வீட்டிற்கு திரும்பாததால், சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள், காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் நீண்ட தேடுதலுக்கு கிர்ரெம்மாவின் சடலத்தை கண்டுபிடித்து உறவினரிடம் ஒப்படைத்தனர். 

Mother of two children .. releation with local boys .. Recovery of corpse in sack ..

ஆனால் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்களை கைது செய்ய வேண்டும் என அவர்கள் காவல் நிலையத்திற்கு முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர், நிச்சயம் குற்றவாளிகள் கைது செய்து தண்டிக்கப்படுவார்கள் என போலீசார் உறுதி அளித்ததில் அவர்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில் தலைமறைவான நரேஷ் மற்றும் நாராயணன் ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios