காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தைச் சேர்ந்தவர் விநாயகம். இவரது மனைவி மீனாட்சி(34). இருவரும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்து உயிரிழந்து விட்டது. அதன்பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே கணவனை பிரிந்து மீனாட்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வருகிறார். அங்கு கட்டிட வேலைக்கு சென்ற போது கட்டிட மேற்பார்வையாளர்க்கும் அவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதில் மீனாட்சி கர்ப்பமானார். அதையறிந்ததும் கட்டிட மேற்பார்வையாளர் அவரை கைவிட்டுவிட்டு தலைமறைவாகி இருக்கிறார். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மீனாட்சி மேல்மலையனூர் கோவிலுக்கு செல்லும் போது திண்டிவனம் அருகே பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அங்கிருக்கும் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தைக்கு மஞ்சள் காமாலை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்தநிலையில் நோயுடன் இருக்கும் குழந்தையை எப்படி வளர்ப்பது என்று பச்சிளம் குழந்தையை கொலை செய்ய முடிவெடுத்தார். அதன்படி விழுப்புரம் பூந்தோட்டம் மாரியம்மன் கோவில் அருகே இருக்கும் கோலியனூரான் வாய்க்கால் கழிவுநீர் கால்வாயில் குழந்தையை வீசினார். அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனே மீனாட்சியும் கால்வாயில் குதித்துள்ளார். இருவரையும் மீட்டு குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு மீனாட்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

'ஒரு நாள் தலைமையாசிரியர்'..! அதிரடி காட்டி அசத்திய அரசு பள்ளி மாணவி..!