Asianet News TamilAsianet News Tamil

அம்மாவை அப்பாதான் கொலை செய்தார்...! போலீசில் போட்டு கொடுத்த 5 வயது மகன்...! கொலையில் திடீர் திருப்பம்...!

உறங்கிக்கொண்டிருந்த கணவனிடம்  மாதாமாதம் மகன் படிப்பு செலிவிற்கு பணமும் தான் திருமணத்தின்போது அணிந்து வந்த 10 சவரன் நகைகளையும் தருமாறு அகிலா கேட்டுள்ளார். கேட்ட அடுத்த நொடியே அகிலாவை வீட்டினுள் இழுத்து சென்று அவர் தான் வைத்திருந்த கத்தியால் கழுத்து, கை, வயிறு, மார்பகம், முதுகு உள்ளிட்ட இடங்களில்  சரமாரியாக குத்தி கொலை செய்தார் தன் மகன் அகிலேஷின் கண்முன்னாலேயே அகிலா துடிதுடித்து உயிரிழந்தார். அகிலா ரத்த வெள்ளத்தில் மயங்கியதையடுத்து தனசேகர் அங்கிருந்து தப்பி ஒடினார்.
 

mother murder by father, 5 year old boy told to police
Author
Chennai, First Published Aug 28, 2019, 11:46 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

சென்னையில் மகன் கண் எதிரிலேயே மனைவியை கொடூரமாக குத்தி கொலை செய்த கணவன் தப்பியோடி உள்ளார், தன் தாயை தந்தைதான் கொலை செய்தார் என கொலையை நேரில் பார்த்த 5 வயது சிறுவன் காவல் நிலையத்தில் சாட்சி கூறியுள்ளான், அதனடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளியை தேடி வருகின்றனர். mother murder by father, 5 year old boy told to police

சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை திருவள்ளூவர் நகர் 4வது தெருவில் வசித்து வந்த தனசேகர்,(37) என்பவர் கடந்த 2013ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சி வல்லம் சித்தம்பூர் மேலத்தூர் கிரமத்தை சேர்ந்த அகல்யா(எ)அகிலா(30) என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு திருமணமான 6 மாதத்திலேயே கணவன்-மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு 5 வயதில் அகிலேஷ் என்ற மகன் உள்ளார். கணவரை பிரிந்த அகிலா மகன் அகிலேஷ்வுடன் சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியில் உள்ள தனது அண்ணன் குணசேகரன் வீட்டில் வசித்து வந்துள்ளார். திருமணத்தின்போது அகிலாவிற்கு 10 சவரன் தங்க நகை போட்டு, கட்டில், பீரோ என அனைத்து பொருட்களையும் வாங்கி கொடுத்துள்ளனர். மேலும் வரதட்சணை கேட்டு மனைவியை தொடர்ந்து அடித்து கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது. mother murder by father, 5 year old boy told to police

பலமுறை  அகிலா தங்கியிருக்கும் அவரது அண்ணன் வீட்டிற்கு கையில் கத்தியுடன் வந்து கணவர் தனசேகர்  நகை கேட்டு மிரட்டி வந்ததாகவும் தெரிகிறது. இதனிடையே அகிலாவின் அண்ணன் குணசேகரன் நேற்று திடீரென உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார்  அந்த நேரத்தில், அண்ணனுடன் இருந்து அவருக்கு தொல்லை கொடுக்க வேண்டாம் என்று முடிவு செய்த அகிலா நீலாங்கரை திருவள்ளுவர் நகர் 4வது தெருவில் உள்ள கணவர் தனசேகர் வீட்டிற்கு சென்று மகனின் படிப்புச் செலவுக்கு பணம் வாங்கிவரலாம் என எண்ணி மகன் அகிலேஷ்வுடன் கணவர் வீட்டிற்கு சென்றார். வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த கணவனிடம்  மாதாமாதம் மகன் படிப்பு செலிவிற்கு பணமும் தான் திருமணத்தின்போது அணிந்து வந்த 10 சவரன் நகைகளையும் தருமாறு அகிலா கேட்டுள்ளார். mother murder by father, 5 year old boy told to police

கேட்ட அடுத்த நொடியே அகிலாவை வீட்டினுள் இழுத்து சென்று அவர் தான் வைத்திருந்த கத்தியால் கழுத்து, கை, வயிறு, மார்பகம், முதுகு உள்ளிட்ட இடங்களில்  சரமாரியாக குத்தி கொலை செய்தார் தன் மகன் அகிலேஷின் கண்முன்னாலேயே அகிலா துடிதுடித்து உயிரிழந்தார். அகிலா ரத்த வெள்ளத்தில் மயங்கியதையடுத்து தனசேகர் அங்கிருந்து தப்பி ஒடினார்.பிஞ்சு குழந்தை கதறி அழுததை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது அகிலா கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் 
நீலாங்கரை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைபற்றி உடற்கூறு ஆய்வுகாக இராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். mother murder by father, 5 year old boy told to police

இச்சம்பவம் தொடர்பாக தனசேகரின் குடும்பத்தினரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் தனசேகர் சென்னையில் ஒரு ஐடி நிறுவனத்தில் ஆப்பிஸ்பாய் வேலை செய்து வருவதும், அகிலாவை திருமணம் செய்வதற்கு முன்பு கம்பியூட்டர் முன்பு அமர்ந்தபடி எடுத்த போட்டோவை காட்டி தான் ஐடி நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றுவதாக கூறி திருமணம் செய்ததும் தெரியவந்துள்ளது.கொலை என்றால் என்ன வென்றே தெரியாத   5 வயது குழந்தை தன் தாயை கத்தியால் தந்தை குத்தினார் என காவல் நிலையத்தில் வாக்குமூலம் காவலர்களையே கண்கலங்க வைத்து விட்டது.  இதனை அடுத்த கொலை செய்திவிட்டு தப்பிய தனசேகரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். 


 

Follow Us:
Download App:
  • android
  • ios