முத்துக்குமாருக்கு புவனேஸ்வரியின் மகள் மீது ஆசை ஏற்பட்டுள்ளது. இதனை புவனேஸ்வரியிடம் தெரிவித்த போது முதலில் அதிர்ச்சியடைந்தார். பின்னர், சம்மதம் தெரிவித்துள்ளார். இதற்கு அவரும் சம்மதம் தெரிவித்ததால் ஒரு வருடமாக முத்துக்குமாருடன் மகளை மிரட்டி ஜாலியாக இருக்க அனுமதித்துள்ளார். அதனால், சிறுமி கர்ப்பமானார்.
பெற்ற மகளை கள்ளக்காதலனுக்கு விருந்தாக்கிய தாய், போலீசுக்கு பயந்து கர்ப்பமான மகளுக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஓட்டேரியை சேர்ந்தவர் புவனேஸ்வரி (40). இவரது கணவர் பாரதி. இவர்கள் 6 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதனால், புவனேஸ்வரி மகளுடன் தனியே வசித்து வருகிறார். இந்நிலையில். மகளுக்கு 17 வயது ஆனது. அப்போது, ஓட்டேரி முத்துக்குமார் (50) என்பவருடன் புவனேஸ்வரிக்கு பழக்கம் ஏற்பாட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் புவனேஸ்வரி போலீஸ் பயத்தில் வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. 2 நாட்கள் கழிந்த நிலையில் குழந்தையின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. உடனே ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டையில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்துக்கு குழந்தையை புவனேஸ்வரியும், முத்துகுமாரும் கொண்டு சென்றனர். அப்போது, சந்தேகமடைந்த செவிலியர் உடனே சிறுமியின் தந்தை யார் என கேட்டபோது முத்துக்குமார் என்று புவனேஸ்வரி கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகம், உடனடியாக குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் குழந்தைகள் நல அமைப்பினர் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதை அறிந்ததும் முத்துகுமாரும், புவனேஸ்வரியும் தலைமறைவாகி விட்டனர். இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.
