பெற்ற குழந்தையை கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னை கோடம்பாக்கத்தில் நடந்துள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் பார்வதீஸ்வரர் காலனியில் வசித்து வருபவர் தினேஷ்குமார். இவர் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்.  காசநோய் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றி வருகிறார்.

 இவருடைய மனைவியின் பெயர் ரக்ஷிதா இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. தினேஷ் வழக்கம்போல அலுவலகத்திற்கு சென்று உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வீடு திரும்பும்போது நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் ஜன்னல் வழியாக தினேஷ் பார்த்துள்ளார். அப்போது தன் மனைவி ரக்ஷிதா தூக்கில் தொங்கியவாறு உள்ள காட்சியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டுள்ளார் இவருடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்திலிருந்து ஓடிவந்து கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது தன்னுடைய ஒரு வயது குழந்தையும் கட்டிலில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

 இதுகுறித்து வடபழனி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இரண்டு உடல்களையும்  பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

 இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் ரக்ஷிதா மனநிலை பாதிக்கப்பட்டு அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகி ஹரியானாவில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் சிகிச்சை முடிந்து சென்ற வாரம் சென்னைக்கு  அழைத்து வரப்பட்டதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் மீண்டும் ரஞ்சிதாவிற்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாகவே தன்னுடைய குழந்தையை கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.