போதையில் மனைவியை சரமாரி வெட்டிக் கொன்றுவிட்டு கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம் குருந்தன்கோடு அருகே உள்ள உண்ணங்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர்(43). தேங்காய் வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி தங்கம்(37) இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர்கள் தற்போது ஆசாரிவிளை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். ராஜசேகருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால், தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் வீட்டு செலவுக்கும் பணம் தருவதில்லை. தங்கம்தான் அந்த பகுதியில் உள்ள ஒரு முந்திரி ஆலையில் வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார்.

 அந்த வேலைக்கு செல்லக்கூடாது என்று ராஜசேகர் தனது மனைவியை அடித்து உதைத்துள்ளார். வழக்கம் போல நேற்று இரவும் போதையில் வந்து மனைவியிடம் தகராறு செய்தார். பின்னர் அனைவரும் தூங்க சென்றனர். குழந்தை தனியறையில் படுக்க வைத்துவிட்டு வீட்டின் மற்றொரு அறையில் ராஜசேகரும் தங்கமும் தூங்கிக் கொண்டுடிருந்தனர்.  இன்று அதிகாலை எழுந்த ராஜசேகர் திடீரென மனைவியிடம் தகராறு செய்தார். அப்போது ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தங்கத்தை சரமாரியாக வெட்டினார்.

இந்த அலறல் சத்தம் கேட்டு வீட்டின் மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் எழுந்து வந்து கூச்சலிட்டனர்.  கழந்தைகள் கதறி அழுதும் கேட்காமல் அவர்கள் கண் முன்னாலேயே சரமாரியாக வெட்டினர். இதில், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதை பார்த்தும் குழந்தைகள் அலறி கொண்டு பக்கத்து வீட்டுக்கு சென்று கதறினர். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது வீட்டிக்குள் ராஜசேகரை காணவில்லை. எனவே அவர் தப்பியோடி இருப்பார் என தேடிய போது வீட்டின் பின்புறம் பகுதியில் உள்ள ஒரு அறையில் ராஜசேகர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இது  தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

பிடித்து குதித்து தங்கள் உயிரை இழந்தான் இதை பார்த்து குழந்தைகள் அலறிக்கொண்டு பக்கத்து வீட்டுக்கு சென்று கதை நாடகம் பகுதி ஓடிவந்து பார்த்தபோது வீட்டுக்குள் ராஜசேகரை கனவில் எனவே அவர் தப்பி ஓடி இருப்பார் என் தேடிய போது வீட்டின் பின்புறம் பகுத்தறிவு அறிவியல் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்த மனைவியை வெட்டிக் கொலை செய்துவிட்டு விட்டு நேராக சென்று ராஜர் தற்கொலை செய்தது தெரியவந்தது இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.