உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த, பெண் ஒருவர் பெற்ற மூன்று மாத குழந்தையை நான்காவது மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம்,  லக்னோவைச் சேர்ந்த தம்பதிகளுக்கு கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பிறந்த ஒரு சில நாட்களிலேயே, இந்த குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாமல் போகவே, தனியார் மருத்துவ மனையில் குழந்தையை அனுமதித்து சிகிச்சை பெற்று வந்தனர்.

ஒரு கட்டத்தில் குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமாகவே, குழந்தைக்கு மஞ்சள் காமாலை ரத்தத்தில் கலந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அந்த மருத்துவமனையிலேயே அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனால்  தாய், மகன் இருவரும் அங்கேயே இருந்துள்ளனர். பின்னர் குழந்தையை காணவில்லை என கூறி, அந்த தாய் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரை விசாரிக்க மருத்துவமனைக்கு விரைந்த போலீசார், அங்குள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை சோதனை செய்தனர். அப்போது அதிர்ச்சி அளிக்கும் விதமாக, புகார் கொடுத்த தாயே அந்த குழந்தையை 4வது மாடியில் இருந்து தூக்கி வீசி கொன்றுள்ளது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவரது கணவர் அளித்த புகாரை தொடர்ந்து போலீசார், தாயை கைது செய்தனர். 

பின் அந்த பெண்ணை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, குழந்தைக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததால், குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தும் பலனில்லை என கருதி தனது குழந்தையை தானே கொன்றதாக பகீர் காரனை கூறியுள்ளார்.