இதற்காகத்தான் மாமியாரை கொன்றேன்.. மருமகள் பரபரப்பு வாக்குமூலம்.. அதிர்ந்து போன போலீஸ்..!
குனிச்சி மோட்டூர் கிராமத்தை சேர்ந்த அம்சா பள்ளியில் 12ம் வகுப்பு படித்தபோது, 11ம் வகுப்பு படித்து கொண்டிருந்த குனிச்சி கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன்(20) என்பவருடன் நட்பாக பழகினார். இவர்கள் இருவரும் அடிக்கடி போனில் பேசி வந்துள்ளனர்.
அதிகாலையில் எழுந்து வீட்டு வாசலில் சாணி தெளித்து கோலம் போடமாட்டாயா? என்று கேட்ட மாமியாரை கழுத்தை இறுக்கி கொலை செய்த மருமகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம், செவ்வாத்தூர் ரயில்நிலையம் அருகே உள்ள புதூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் தனியார் கம்பெனி காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராணி(50). இவர்களது மகன் ஏழுமலை. இவரது மனைவி அம்சா(22). இவர்களுக்கு 10 மாத பெண் குழந்தை உள்ளது. இவர்கள் கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர். கடந்த 29ம் தேதி இரவு செல்வராஜ் வழக்கம் போல பணிக்கு சென்றுவிட்டார். வீட்டின் வராண்டாவில் ராணியும், அறையில் மருமகள் அம்சாவும் தூங்கினர்.
இதையும் படிங்க;- முதல் இரவுக்கு சென்ற புதுமணப்பெண்.. மிருகத்தனமாக நடந்து கொண்டதால் கம்பி எண்ணும் கணவர்..!
அதிகாலையில் எழுந்து பார்தத்த போது ராணி கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். இதனை கண்ட அம்சா அதிர்ச்சியில் அலறி கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து மருமகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது, மருமகள் விசாரணை நடத்திய போது முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார்.
இதையும் படிங்க;- வயிற்று வலியை போக்குவதாக கூறி சிறுமி வயிற்றில் பிள்ளையை கொடுத்த 65வயது பூசாரி கிழவன்.. அலேக்கா தூக்கிய போலீஸ்
இதனால் மேலும் சந்தேகம் அடைந்த போலீசார், அம்சாவின் செல்போனை கொண்டு அதில் வந்த எண்களை ஆய்வு செய்தபோது, அம்சா அடிக்கடி ஒரே நபரிடம் செல்போனில் பேசியது தெரியவந்தது. கிடுக்கிபிடி விசாரணையில் ஆண் நண்பருடன் சேர்ந்து மாமியாரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதுதொடர்பாக போலீசில் அவர் அளித்த வாக்குமூலத்தில்;- குனிச்சி மோட்டூர் கிராமத்தை சேர்ந்த அம்சா பள்ளியில் 12ம் வகுப்பு படித்தபோது, 11ம் வகுப்பு படித்து கொண்டிருந்த குனிச்சி கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன்(20) என்பவருடன் நட்பாக பழகினார். இவர்கள் இருவரும் அடிக்கடி போனில் பேசி வந்துள்ளனர். இதற்கிடையில் அம்சாவுக்கு ஏழுமலை என்பவருடன் திருமணமானது. பின்னர் ஏழுமலை சென்னைக்கு சென்றுவிட்டதால், மாமியாருடன் வசித்து வந்த அம்சா அடிக்கடி கார்த்திகேயனுடன் போனில் பேசுவதை மாமியார் ராணி கண்டித்துள்ளார்.
அதேபோல் அம்சா தினமும் காலை தாமதமாக எழுந்துள்ளார். இதனால் அதிகாலையில் எழுந்து வீட்டு வாசலில் சாணி தெளித்து கோலம் போடமாட்டாயா? என்று ராணி திட்டியுள்ளார். இதுகுறித்து அம்சா தனது ஆண் நண்பரும் சேர்ந்து கட்டையால் அடித்து கழுத்தை நெறித்து கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க;- மட்டையாகும் அளவிற்கு சரக்கை ஊத்தி கொடுத்த மனைவி.. இறுதியில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்..!