மருமகனின் அண்ணனையே காதலித்து மாமியார் திருமணம் செய்துகொண்டுள்ள சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  குருதாஸ்பூரைச் சேர்ந்தவர் சந்தியா இவருக்கு  18 வயதில் ஒரு பெண் இருக்கிறார், அவருக்கு பக்கத்து ஊரைச் சேர்ந்த 21 வயது இளைஞரும்  காதலித்து வந்தனர்,  மகளின் காதல் விவகாரம் தெரிந்தவுடன் சந்தியாவும் அவரது கணவரும் காதலித்த இளைஞருக்கு மகளை திருமணம் செய்து வைத்தனர்.

   

இந்நிலையில் மகள் கணவர் வீட்டுக்கு சென்று விட்டாள்.  இதனையடுத்து தன் மருமகனின் அண்ணன் 22 வயதுடைய நபர் பதன்கோட் பகுதியில் வேலை செய்து வந்துவந்தார்  அந்த இளைஞர் தம்பியின் மாமியார் என்ற முறையில் அடிக்கடி மாமியார் சந்தியாவின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார் அப்போது அவருக்கும் சந்தியாவுக்கு மிடையே பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியது, ஒருகட்டத்தில் இருவரும் வீட்டில் சந்தித்து  தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

இந்நிலையில் மருமகனின் அண்ணன் என்றும் பாராமல் அவரையே திருமணம் செய்து கொள்ள தம்பியின் மாமியார் சந்தியா முடிவு செய்தார். அதைதொடர்ந்து தன் கணவரை விவாகரத்து செய்ய திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை அவர் செய்தார்.நீதிமன்றத்திலிருந்து தன் கணவருக்குத் தெரியாமலேயே விவாகரத்தும் பெற்றார் அதனையடுத்து  மருமகனின் அண்ணனுடன் வீட்டை விட்டு வெளியேறி அவர்  திருமணமும் செய்து கொண்டார்.   சந்தியாவின் இந்நடவடிக்கைகள் எதுவுமே அவரது கணவருக்கு தெரியாது, சந்தியா வீட்டை விட்டு ஓடிய பிறகுதான் அவரது கணவர் சந்தியாவை தேடினார்.  சில தினங்கள் கழித்து சந்தியா மருமகனின் அண்ணனுடன் திருமணமான கோலத்தில்  மாலையும் கழுத்துமாக வீட்டுக்கு வந்தார். தாய் மணக்கோலத்தில் வீட்டுக்கு வந்திருப்பதை கண்டு அவரது மகள் அதிர்ச்சி அடைந்தார்.  அவருடன தன் மூத்தனார் உடன் இருப்பது அவரை துக்கிவாரிப் போடவைத்தது.  இருப்பதைக்கண்டு  உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

 

இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறியதுடன் தங்களை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டனர். ஆனால் இது முறைதவறிய உறவு என்பதால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். அத்துடன் ஒழுங்காக இருவரும் பிரிந்து விடவேண்டும் என எச்சரித்தனர்.  இதனால் சந்தியா தனக்கு பாதுகாப்பு வழங்க கோரி அங்குள்ள காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் இச்சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிவருகிறது.