உல்லாசமாக இருக்கும்போது இடையூறாக இருந்ததால் காம போதை தலைக்கேறி பிஞ்சு  குழந்தையை சுவற்றில் அடித்து கொன்ற பால்வியாபாரியும், உடந்தையாக இருந்த கல் நெஞ்சம் கொண்ட இளம் பெண்ணும் செய்த இந்த கொடூர கொலை மற்றும்  அந்த பெண் இரண்டு மாதங்களுக்கு முன்பே கணவனை எச்சரித்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கழுமலை அருகே பழங்கோட்டை கிராமத்தை சேர்ந்த ராஜூ, மின்வாரியத்தில் கணகீட்டாளராக வேலை பார்த்து வருகிறார் இவர், செல்லையா என்ற போலீஸ்காரரின் மூத்த மகள் வடகாசி என்ற பெண்ணை 2வது தாரமாக கல்யாணம் செய்திருந்தார். இவர்களுக்கு 1 1/2 வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில் வட காசிக்கும் அவரது வீட்டிற்கு பால் ஊற்றவரும் பால் வியாபாரி சாமிநாதனுக்கு பழக்கும் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் அவரது வீட்டிற்கே சென்றும், கணவன் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வரவழைத்தும் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.  சாமிநாதனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி, 2 குழந்தைகள் இருந்தாலும், கள்ளக்காதலிக்காகவே வாடகைக்கு ஒரு வீட்டை எடுத்து வைத்திருந்தார். 

இந்நிலையில் செவ்வாய் கிழமை அதிகாலை வடகாசியும், சாமிநாதனும் தலையில் அடிபட்டு மூர்ச்சையான நிலையில் இருந்த ஆண் குழந்தையுடன் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு குழந்தை மாடிப்படியில் உருண்டு விழுந்து மயங்கிவிட்டது என கூறினார். அப்போது குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை அடித்து கொல்லப்பட்டிருப்பதை கண்டு அதிர்ந்து போயினர். உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்து இருவரையும் ஒப்படைத்தனர்.

குருவிக்குளம் போலீசார் நடத்திய விசாரணையில் அதிரவைக்கும் தகவல்கள் கிடைத்துள்ளது   ராஜீ மற்றும் வடகாசி இருவருக்குமே இது 2 வது கல்யாணம், அளவுக்கு அதிகமாக சரக்கு அடிக்கும் கொண்ட ராஜீ இரவு பணி இருப்பதாக கூறி அடிக்கடி வெளியில் சென்றுவிடுவதால் தனிமையில் ஏங்கிய  வடகாசிக்கு பால்வியாபாரி சாமிநாதன் துணை தேவைப்பட்டுள்ளது, அதே ஊரில் மற்றொரு பகுதியில் வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்து வைத்திருந்த பால் வியாபாரி தனது ஆசை காதலி வடகாசியுடன் தனிமை சந்தோஷமாக அனுபவித்து வந்துள்ளார். இதற்கு வசதியாக கடந்த 6 மாதத்திற்கு முன்பு தனது 1 1/2 வயது ஆண் குழந்தையையும் சங்கரன் கோவிலில் உள்ள மாமியார் வீட்டில் விட்டு வந்துள்ளார்.

இடையில் ஒரு நாள் இரவு பணிக்கு செல்வதாக கூறிச்சென்ற ராஜீ, வீட்டிற்கு பாதியில் திரும்பிக் கொண்டிருந்தபோது தனது மனைவி வடகாசி, பால் வியாபாரியுடன் டூவீலரில் வாகனத்தில் செல்வதை பார்த்து பின் தொடர்ந்துள்ளார். அப்போது இருவரையும் அதே ஊரில் மற்றொரு வீட்டில் தங்கி தனிமையை கழிப்பதை நேரில் பார்த்து பிடித்த அவர் எச்சரித்துள்ளார்.என்னதான் கண்டித்தலும் மனைவி வடகாசி கேட்கவே இல்லை. தங்கள் கள்ளக்காதலை தொந்தரவு செய்தால், உன் குழந்தையை கொன்றுவிடுவேன் என்று மிரட்டி வந்துள்ளார்.  

இந்த சம்பவத்திற்கு பின்னர் கணவன் மீது ஆத்திரம் அடைந்த வடகாசி, கணவனை போட்டு தள்ள ஐடியா கூறிய சாமி நாதன் கூலிப்படையை சேர்ந்த ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் குழந்தையை பார்க்க வேண்டும் என்று ராஜீ அடம் பிடித்ததால் மாமியார் வீட்டில் இருந்த தனது குழந்தையை வாங்கி வந்துள்ளார் வடகாசி.

நேற்று முன்தினம் இரவு, ராஜீ மின்வாரிய வேலைக்கு சென்று விட 1 1/2 வயது குழந்தையுடன் சாமிநாதனை தனிமையில் சந்திக்கும் வீட்டிற்கு சென்றுள்ளார் வடகாசி. குழந்தை அழாமல் இருப்பதற்காக அங்கு தற்காலிகமாக சேலையில் தொட்டில் கட்டிப்போட்டுள்ளார் வடகாசி. அதிகாலை 3 மணி அளவில் குழந்தை பசியால் தொடர்ந்து அழுததால் ஆத்திரம் அடைந்த சாமிநாதன் சேலையில் கட்டப்பட்ட தொட்டிலோடு சேர்த்து  குழந்தையை சுவற்றில் தூக்கி அடித்துள்ளான். இதில் பலத்த காயம் அடைந்த குழந்தை துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானது கூறப்படுகின்றது.

இதற்கிடையே அதிகாலை வேளையில் தூக்க மயக்கத்தில் வீடு திரும்பிய கணவர் ராஜீ, மனைவியையும் குழந்தையையும் தேடி பார்த்தார்.  மனைவி, குழந்தை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து மாமனாருக்கு போன் பண்ணி கேட்டபோது, எப்போதோ குழந்தையுடன் வடகாசி சென்றுவிட்டதாக சொன்னார். அப்போதுதான் ராஜ்-க்கு தனது மனைவியின் ஆசை காதலன் சாமிநாதன் மீது சந்தேகம் வந்துள்ளது, சாமிநாதன் வீட்டில் தனது மனைவி இருக்கலாம் என்று நினைத்து அவரை தேடிக் கொண்டு அதிகாலையில் கிளம்பி போனார்.  இருவரும் ஜாலியாக இருந்திருக்கிறார்கள். ஆனால் குழந்தையோ பசிக்காக அழுதிருக்கிறது.  

முதலில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று மாடிப்படியில் இருந்து குழந்தை உருண்டு விழுந்து விட்டது என்று கதை விட்டுள்ளனர். பின்னர் டாக்டர்கள் போலீசுக்கு தகவல் அளிப்பதை தெரிந்து கொண்ட அவர்கள் அங்கிருந்து தப்பி பஸ் ஏறி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்குள்ள மருத்துவர்களின் சாமர்த்தியத்தால் குழந்தையை கொன்ற ரகசிய காதலர்கள் போலீசில் சிக்கிக் கொண்டனர்.