குடியாத்தம் அருகே  தாயின் குளியல் வீடியோவை காட்டி பாலியல் தொந்தரவு மற்றும் பணி பறித்து வந்த நபரை போலீநார் அதிரடியாக கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே  உள்ள கிராமத்தை சேர்ந்த 24 வயது பெண். இவர் சென்னை தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவரது தாய் குளித்துக்கொண்டிருக்கும் போது அதே பகுதியை சேர்ந்த கூலி தொரிலாளி யுவராஜ் (34) என்பவர் சில மாதங்களுக்கு முன்பு மறைந்திருந்து செல்போனில் படம் எடுத்ததாக கூறப்படுகிறது. 

இதற்கிடையில், குளியல் வீடியோவை இளம் பெண்ணிடம் காண்பித்து தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என யுவராஜ் மிரட்டி வந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த இளம்பெண் இதற்கு மறுத்துள்ளார். இருப்பினும் யுவராஜ்  தனது ஆசைக்கு இணங்காவிட்டால் தாயின் குளியல் வீடியோவை இன்டர்நெட்டில் பதிவிடுவேன் என மிரட்டி இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து பணம் பறித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு யுவராஜ் இந்த இளம்பெண் மற்றும் அவரது தாயை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், இருவரும் படுகாயமடைந்துள்ளனர். இதுகுறித்து இளம்பெண் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து யுவராஜை கைது செய்தனர்.