அந்தேரி பகுதியில் உள்ள லோகாண்ட்வாலா காம்ளக்ஸில் டாக்டர் சிம்பிள் அகர் கிளினிக் நடந்த்தி  வந்துள்ளார் . சரும அழகூட்டல், உடல் எடை குறைப்பு செய்யப்படுகிறது. இந்த கிளினீக்கிற்கு ஹேர் ரிமூவல் சிகிச்சைக்காக சென்ற பெண் மாடல் ஒருவர் தனது ஆடைகளை களைந்து விட்டு நிர்வாண நிலையில் படுக்க வைக்கப்பட்டார். சிகிச்சை நடந்து கொண்டிருந்த போது தலைக்கு மேலே ஒரு லைட் ஒளி வருவதைப்பார்த்த அந்த பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அது குறித்து சிகிச்சை அளித்த பெண்ணிடம் கேட்டதற்கு அது தீ பிடிப்பது பற்றி புகையை உணர்த்தும் கருவி என்று சொல்லி சமாளித்துள்ளார். ஆனாலும் சந்தேகம் தீராத அந்த பெண், உடனடியாக தனது ஆடைகளை போட்டுக்கொண்டு, தனது செல் போன் வைத்து அந்த ஒளி வருவதை போட்டோஎடுத்துக் கொண்டார். டிஹாநாயடுத்து ஆண்டு மாலையே இந்த தகவல் தெரிந்த  அந்த கிளினிக்கின் டாக்டரிடம் இருந்து அந்த மாடலுக்கு போன் வந்தது. சிகிச்சைக்கு வந்த நீ ஏன் செல்போனில் படம் எடுத்தீங்க? என மிரட்டும் தொனியில் கேட்டதுமட்டுமல்லாமல், . இந்த சம்பவங்களை வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் என எச்சரித்துள்ளார்.  இந்த எச்சரிக்கையால் சந்தேகம் அதிகமான அந்த மாடல் கிளினிக்கில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை உறுதியாக நம்பிய அந்தப் பெண் இது பற்றி ஓஷிவாரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

வழக்குப் பதிவு செய்த போலீசார், உடனடியாக அந்த கிளினிக்கிற்கு சென்று சோதனை நடத்தியதில், அங்கு பல இடங்களில் அதாவது பெண்கள் உடை மாற்றும் இடம் பாத்ரூம் என ஆங்காங்கே ரகசிய கேமரா மறைத்து வைக்கப்பட்டிருந்ததை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். கிளினிக்கை நடத்திய டாக்டரை கைது செய்த போலீசார், கிளினிக்கை சீல் வைத்தனர். மும்பை அந்தேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அந்த டாக்டருக்கு ஜாமீன் அளிக்கப்பட்டது. தன் மீதான புகார் பொய்யானது என்றும் இதிலிருந்து தான் மீண்டு வந்து உண்மையை நிரூபிப்பேன் என்றும் அந்த டாக்டர் சொல்லி வருகிறார்.