தமிழக பாஜக தலைவர் கணவரிடமே மர்ம நபர்கள் பணத்தை அபேஸ் பண்ணிவிட்டார்கள். தமிழக பாஜக தலைவர் தமிழிசையின் கணவர் சவுந்தராஜன் ஒரு புகழ்பெற்ற டாக்டர். இவர் சென்னை போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி சிறுநீரகவியல் துறைத் தலைவராகப் பணியாற்றிவருகிறார்.

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை செய்தவர் என்ற  பெருமைக்கு சொந்தக்காரரான இவர், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்,  தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்த தலைவர்கள் எம்ஜிஆர் மனைவி ஜானகி , மூப்பனார்  போன்றவர்களுக்கு சிறுநீரக சிகிச்சை அளித்துள்ளார். அதுமட்டுமல்ல ஆயிரக்கணக்கானோருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையையும் வெற்றிகரமாக செய்தவரும் ஆவார். 

இந்நிலையில், டாக்டர். சவுந்தரராஜனின் ரூ 50 ஆயிரம் பணம் திருடு போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  சென்னை ஏர்போர்ட்டுக்கு வந்த டாக்டர் சவுந்தராஜனிடமிருந்த ரூ 50 ஆயிரம் ருபாய் பணம் மாயமாகி உள்ளதாக தெரிகிறது. உடனடியாக இது குறித்து விமான நிலைய போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. அந்த புகாரின் பேரில் விசாரணையும் நடந்து வருகிறது.