வீட்டுக்கு பிரியாணி ஆர்டர் செய்யும் அபிராமிக்கு  பிரியாணி எடுத்து செல்வேன்.  அபிராமி மீது இருந்த அன்பு காரணமாக ஒவ்வொரு முறையும் கூடுதலாக பிரியாணி  கொடுத்து உல்லாசமாக இருப்போம் என வாக்குமூலம் அளித்துள்ளார்.

பிரியாணி கொடுக்கல் வாங்கலில் அபிராமிக்கும், சுந்தரத்திற்கும் இடையே நெருக்கம் அதிகமானதால், காமம் கண்ணை மறைதது, சுந்தரத்துடன் நிரந்தரமாக வாழ முடிவு செய்த அபிராமி பெற்ற தனது இரண்டு குழந்தைகளை விஷம் வைத்துக்  கொன்றுவிட்டு கணவனைக் கொலை செய்ய காத்திருந்து பிறகு தப்பித்துச் சென்ற அபிராமி   நாகர்கோவிலில் கைதானார். உடனடியாக, அவர் சென்னைக்கு அழைத்துவரப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல விவரங்கள் தெரிய வந்துள்ளன. 

அதேபோல கள்ளக் காதலன் சுந்தரத்திடம் நடந்த விசாரணையில்; சில மாதங்களுக்கு முன்பு விஜய், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் குன்றத்தூரில் உள்ள பிரியாணி எங்கள் பிரியாணி கடைக்கு வந்து பிரியாணி சாப்பிட்டார். பிரியாணி கடைக்கு அபிராமி அடிக்கடி வருவார். அப்போது,  அவருடன்  பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில், அது  காதலாக மாறியது.  

எங்கள் கடைக்கு  சாப்பிட வரும்போது வழக்கமாக கொடுக்கும் அளவை விட அதிகமாக பிரியாணி கொடுத்து அபிராமியுடன் நெருக்கத்தை அதிகமாக்கிக் கொண்டேன். அதன் பின் அவர் தொலைப்பேசியில் பிரியாணி ஆர்டர் கொடுப்பார். அப்போது, வீட்டிற்கு சென்று பிரியாணி கொடுத்துவிட்டு, அவருடன் உல்லாசமாக இருப்பேன். அதேபோல என் வீட்டிற்கு அவரை அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளேன்’ என கூறியுள்ளார்.