18 வயசு கூட ஆகாத சிறுமி, தனது காதலுக்கு வீட்டில் யாருமே தன் காதலை ஏற்காததால், வீட்டிலுள்ள ஒட்டுமொத்த பேருக்கும் சாப்பாட்டில் விஷம் வைத்து விட்டு தப்பியோடிய சம்பவம் நடந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தில் 18 வயசு முழுமையாக பூர்த்தியடையாத சிறுமிக்கு, அரவிந்த் குமார் என்பவருடன் காதல் ஏற்பட்டது. வீட்டில் விஷயம் தெரிந்து சிறுமியை கடுமையாக கண்டித்துள்ளார். ஆனால் சிறுமியும், அரவிந்த்குமாரும் கேட்பதாக இல்லை. அதனால் தன் மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக, சிறுமியின் பெற்றோர் இளைஞர் மீது போலீசில் புகார் தந்தனர். அதன்படி போலீசும் இளைஞனை கைது செய்து சிறைக்கு கொண்டு சென்றது. 

தற்போது அந்த இளைஞர் ஜாமீனில் வெளியே வந்த அவர், நேராக சிறுமி வீட்டுக்கு போய், யாராவது எங்க காதலுக்கு குறுக்கே நின்னா, நடக்கறதே வேற? என்று அசிங்க அசிங்கமாக திட்டியும், மிரட்டி விட்டு வந்தார். பல எதிர்ப்புகளுக்கு மத்தியில், காதலும் தொடர்ந்து. ஒரு கட்டத்தில் வீட்டில் உள்ளவர்கள் தொடர்ந்து டார்ச்சர் கொடுக்கவே, டென்ஷனான சிறுமி, அவர்களை கொலை செய்யவே முடிவு செய்துவிட்டார். அதற்காகவே  விஷத்தை யாருக்கும் தெரியாமல் வாங்கி வந்துள்ளார். திடீரென ஒருநாள் சிறுமியே வீட்டிலுள்ள அனைவருக்கும் சமைத்தாள். அதை சாப்பாட்டிலும் ஊற்றி கலக்கி விட்டாள். இந்த சாப்பாட்டை சாப்பிட்டவுடன் ஒவ்வொருவராக மயங்கி விழுந்தனர்.

சிறுமியின் தாய், 2 சகோதரிகள், 2 சகோதரர்கள், அண்ணி, அண்ணன் மகன் என 7 பேரும் உயிருக்கு போராடி கிடந்தனர். அந்த நேரம் பார்த்து, பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் யதேச்சையாக உள்ளே வர, எல்லாரும் கீழே விழுந்து கிடைப்பதைப் பார்த்து  அலறிய அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனைக்கு  தூக்கி சென்றார். அப்போதுதான், குடும்ப உறுப்பினர்களில் சிறுமி மட்டும் எஸ்கேப் என்று தெரியவந்தது. அதோடு மட்டுமல்ல காதலனும் எஸ்கேப் . மொத்த குடும்பத்தையும் சாப்பாட்டில் விஷம் வைத்து கொலை அளவுக்கு துணிந்த சிறுமி மற்றும் காதலனை போலீசார் வலை வீசித் தேடி வருகிறார்கள். மருத்துவமனையில் உள்ள அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.