Asianet News TamilAsianet News Tamil

விறகு பொறுக்க சென்ற பெண்ணை விரட்டி விரட்டி பாலியல் பலாத்காரம்.. 2 பேருக்கு 40 ஆண்டு சிறை.. நீதிமன்றம் தீர்ப்பு

சோளகாட்டுக்குக் கொண்டு சென்று வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றனர். அவர்கள் அங்கிருந்து சென்றபின், அந்தப் பெண் அழுதுகொண்டே தன் வீடு திரும்பினார். அதனை அடுத்து என்ன நடந்தது என்று பெண்ணிடம் விசாரித்த தந்தை, விவரங்களைத் தெரிந்து கொண்டு உடனடியாக குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

mentally woman rape case...karur court judgement
Author
Karur, First Published May 18, 2022, 10:20 AM IST

மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இருவருக்கு 40 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

கரூர் மாவட்டம், கடவூர் வட்டம் கொசூர் அருகில் உள்ள மேட்டூர் கிராமத்தில் வசிப்பவர் மாணிக்கம். இவரது மகளுக்கு திருமணம் செய்து கொடுத்திருந்த நிலையில் மனநலம் பாதிப்பு காரணமாக கணவனைப் பிரிந்து தந்தையின் வீட்டிற்கே வந்துவிட்டார். தந்தை வீட்டில் வசித்து வந்த 23 வயதுடைய அந்த பெண், கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 17-ம் தேதியன்று விறகு பொறுக்குவதற்காக வயல்வெளிக்கு சென்றிருக்கிறார்.

mentally woman rape case...karur court judgement

அப்போது அங்கு வந்த கணேசன் (28) மற்றும் முனியப்பன் (23) ஆகிய இருவரும் அவர்களது இரு சக்கர வாகனத்தில் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக ஏற்றி அருகில் உள்ள ஒரு சோளகாட்டுக்குக் கொண்டு சென்று வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றனர். அவர்கள் அங்கிருந்து சென்றபின், அந்தப் பெண் அழுதுகொண்டே தன் வீடு திரும்பினார். அதனை அடுத்து என்ன நடந்தது என்று பெண்ணிடம் விசாரித்த தந்தை, விவரங்களைத் தெரிந்து கொண்டு உடனடியாக குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

mentally woman rape case...karur court judgement

இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த மகளிர் காவல் நிலைய போலீசார் கணேசன், முனியப்பன் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், அனைத்து தரப்பு விசாரணையும் நிறைவு பெற்ற நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  அதில், குற்றவாளிகள் இருவருக்கும் தலா 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் தலா 3,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அபராதம் கட்டத் தவறினால் மேலும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios