மருந்து கடை உரிமையாளர் சரமாரியாக வெட்டி படுகொலை.. இதுதான் காரணமா? பகீர் தகவல்..!

சென்னை, வண்டலூர் அடுத்த மண்ணிவாக்கம், ஊராட்சிக்கு உட்பட்ட ராஜாத்தி கலைஞர் நகரைச் சேர்ந்தவர் வினோத்குமார் (45).  ஓட்டேரியில் மருந்து கடை நடத்தி வருகிறார். 

medical shop owner murder.. Is this the reason? shock information tvk

சென்னை வண்டலூர் அருகே மருந்து கடை உரிமையாளர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்னை, வண்டலூர் அடுத்த மண்ணிவாக்கம், ஊராட்சிக்கு உட்பட்ட ராஜாத்தி கலைஞர் நகரைச் சேர்ந்தவர் வினோத்குமார் (45).  ஓட்டேரியில் மருந்து கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், வழக்கம்போல் மெடிக்கல் கடையை மூடிவிட்டு நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் ஓட்டேரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள ஒரு பேக்கரி கடைக்குச் சென்று தின்பண்டங்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்பியுள்ளார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்து சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்தனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த வினோத்குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வினோத்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஓட்டேரியைச் சேர்ந்த பிரபல ரவுடி சிலம்பரசன் மாமூல் கேட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வினோத்குமாரை கத்தியை காட்டி மிரட்டிய விவகாரத்தில் சிறையில் உள்ளார்.

இதையும் படிங்க;- கள்ளக்காதலனுடன் 2 குழந்தைகளின் தாய் செய்கிற வேலையா இது.. நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்..!

இந்நிலையில் சிலம்பரசன் ஆதரவாளர்கள் வினோத்குமாரிடம் புகாரை திரும்ப பெற கொலை மிரட்டல் விடுத்ததால், சந்தேகத்தின் அடிப்படையில் சிலம்பரசனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரது தலைமையிலான கும்பல்தான் இந்த கொலையை அரங்கேற்றியதா? அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios