மனைவியுடன் உல்லாசமாக இருந்த நண்பனை சரக்கு வாங்கி கொடுத்து, கத்தியால் செதில் செதிலாக குத்திக் கொலை செய்துவிட்டு தலைமறைவாகிவிட்ட  மெக்கானிக்கை போலீஸார் தேடிவருகின்றனர்.

ஆந்திராவைச் சேர்ந்தவர் நாகராஜின் மனைவி மாலதி. இந்த தம்பதி குடும்பத்துடன் சென்னை கிழக்குக் கடற்கரை சாலை கொட்டிவாக்கம் பகுதியில் குடியிருந்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டும் ஜெகனுடன் நாகராஜுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் அடிக்கடி ஜெகன் நாகராஜ் வீட்டுக்கு வந்து போகும் அளவிற்கு வளர்ந்தது. ஆரம்பத்தில் நாகராஜின் மனைவி மாலதியும் ஜெகனும் பழகினர். அதை நாகராஜும் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை.

இந்நிலையில் நாகராஜ் வீட்டில் இல்லாத நேரத்தில் ஜெகன் வந்து நாகராஜ் மனைவியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அதை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பார்த்து, இந்த விஷயம் நாகராஜிக்கே தெரிய வந்தது, இதனால் நாகராஜுக்கும் அவரின் மனைவிக்கும் தகராறு ஏற்பட்டது. என் வீட்டுக்கு வராதே என்று ஜெகனிடம் நாகராஜ் சொல்லிப்பார்த்தார். நானும் மாலதியும் அண்ணன் தங்கையாகவே பழகுகிறோம். அது, மற்றவர்களுக்குத் தவறாகத் தெரிகிறது. நான் அப்படிப்பட்டவன் அல்ல, நீ என்னை நம்பு, நண்பா என்று நாகராஜிடம் ஜெகன் கூறினார். நாகராஜ்  எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை.  ஆனால், நாகராஜின் மனதில் பதிந்த சந்தேகப் பார்வை மாறவில்லை.
 
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெகனைக் கொலை செய்யபிளான் போட்டுள்ளார்  நாகராஜ். இதையடுத்து தன்னுடைய இன்னொரு நண்பனான மாரிமுத்து மூலம் ஜெகனை சரக்கு விருந்து அழைத்துள்ளார். அவரும் நண்பன் தானே கூப்பிடுகிறான் என்பதால் ஓகே என்று சொல்லியுள்ளார். இதையடுத்து மூன்று பேரும் கோவளம் அடுத்த திருவிடந்தை கடற்கரைக்குச் சென்றனர். 

அங்கு 3 பேரும் மது அருந்தினர்.  இந்தச் சமயத்தில் ஜெகனிடம் தனியாகப் பேச வேண்டும் என்று அவரை நாகராஜ் அழைத்துச் சென்றார். ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து கத்தியால் ஜெகனை ஆத்திரம் தீர செதில் செதிலாக வெட்டித்த தீர்த்தார். மதுபோதையிலிருந்த ஜெகன், நாகராஜிடமிருந்து தப்பிக்க முயன்றும் முடியவில்லை. ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாமாக ஜெகன் மடிந்தார்.

அதன் பிறகு, எதுவுமே நடக்காதுபோல மாரிமுத்து அமர்ந்திருந்த இடத்துக்கு நாகராஜ் வந்தார். அங்கு வா, நாம் வீட்டுக்குப் போகலாம் என்று கூறியுள்ளார். அப்போது மாரிமுத்து, ஜெகன் எங்கே என்று கேட்டுள்ளார். அதற்கு அவன் சரக்கு போதையில் மயங்கிவிட்டான், அதனால் நாம இருவரும் வீட்டுக்குச் செல்வோம் என சொல்லிவிட்டு இதையடுத்து இருவரும் வீட்டுக்கு வந்தனர். வரும்வழியில் ஜெகனைக் கொலை செய்ததை நாகராஜ் மாரிமுத்துவிடம் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார்.

இதற்கிடையில் ஜெகன், கொலை செய்யப்பட்ட தகவல் மாமல்லபுரம் காவல் நிலையத்துக்குத் தெரியவந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் ஜெகனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரைக் கொலை செய்த குற்றத்துக்காக நாகராஜை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் சம்பவ இடத்திலிருந்த மாரிமுத்துவைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.