திருமண இணையதளம் மூலம் இளம்பெண்ணுடன் பழகி உல்லாசமாக இருந்தபோது எடுத்த வீடியோக்களை வெளியிடுவதாக கூறிய இளைஞர் வசமாக சிக்கியுள்ளார். 

சென்னை, திருவெற்றியூரில் உள்ள இளம் பெண் ஒருவர் தனது கணவரோடு விவாகரத்து செய்துவிட்டு தனியாக வசித்து வந்தார். அப்போது திருமணத்திற்குப் பதிவு செய்யும் இணையதளம் மூலம் வியாசர்பாடியைச் சேர்ந்த அஜ்மல் என்ற இளைஞர் அந்த பெண்ணை நெருங்கி பழகி உள்ளார். இதையடுத்து இருவரும் பேசி பழகி வந்துள்ளார்கள். அஜ்மலில் பேச்சில் அந்த பெண் உருகிய நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். 

இதனிடையே அந்தப் பெண்ணிடம் இருந்து 15 சவரன் நகை, 2.50 லட்சம் ரொக்க பணத்தை அஜ்மல் வாங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் அஜ்மலின் நடவடிக்கைகளில் அந்த பெண்ணிற்குச் சந்தேகம் ஏற்பட, தான் கொடுத்த நகை மற்றும் பணத்தை அந்த பெண் திரும்பக் கேட்டுள்ளார் அந்தப்பெண். இதனால் ஆத்திரமடைந்த அஜ்மல் இளம் பெண் கொடுத்த நகை மற்றும் பணத்தைத் திரும்பக் கொடுக்க மறுத்ததோடு தன்னுடன் இருக்கும் நெருக்கமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனைச் சற்றும் எதிர்பாராத அந்த பெண் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். இதையடுத்து நடந்த சம்பவங்கள் அனைத்தையும் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து அஜ்மலின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்த, அந்த பெண்ணின் குடும்பத்தினர், அங்குச் சென்று அஜ்மலைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அப்போது அஜ்மலின் போனை வாங்கி, அந்த பெண் தொடர்பான புகைப்படங்களை அழிக்கலாம் எனப் பார்த்தபோது அவர்களுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது.

அதில் பல பெண்களோடு அஜ்மல் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சிக்கியது. இதையடுத்து அஜ்மல் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல பெண்களை இதுபோன்று ஏமாற்றி மோசடி செய்தது தெரியவந்தது. மேட்ரிமோனி மூலம் வரன் தேடுபவர்கள் சம்மந்தப்பட்ட நபர் குறித்து நன்கு விசாரிக்க வேண்டும். இல்லையென்றால் இது போன்ற நபரின் பின்புலம் தெரியாமல் பழகி பணம் மற்றும் நிம்மதியைத் தொலைப்பது தான் மிச்சம். இப்போது அஜ்மல் காவல்துறையின் பிடியில் சிக்கியுள்ளான்.