மூன்று பெண் பிள்ளைக்கு தகப்பனான பின்பு வேறு பெண்ணுடன் பலான உறவு வைத்திருததால், மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர், சேமுண்டி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ முருகன், மனைவி வினிதா. இவர்களுக்குத் கல்யாணமாகி  15 வருஷம் ஆன நிலையில் அபித்ஷா, அனுஸ்ரீ, அக்க்ஷதா ஆகிய மூன்று பெண் குழைந்தைகள் உள்ளனர். சந்தோஷமாக சென்றுகொண்டிருந்த இவர்களின் குடும்ப வாழ்க்கையில், முருகனுக்கு குடிப்பழக்கமும்  மற்றும் வேறு ஒரு பெண்ணிடம் பலான உறவும் , இந்த பாச குடும்பத்தை கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்க ஆரம்பித்துள்ளார்.

கணவனின் மோசமான செயலை கண்டித்துள்ளார் வினிதா ஆனால், கணவன் முருகன் கேட்பதாக இல்லை. முருகனின் நடவடிக்கைகளால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான மனைவி வினிதா, கடைசியாக மனமுடைந்து தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துக்கு வந்துள்ளார். தான் இறந்தால் மூன்று பெண் குழந்தைகளின் வாழ்க்கை பாழாகிவிடும் என்ற பயத்தில் கடந்த 4 ஆம் தேதி குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் விஷம் குதித்துள்ளார். 

இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர், வினிதா மற்றும் 3 மகள்களையும் உடனடியாக கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துனர். ஆரம்ப சிகிச்சைக்கு பின் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். இதில், சிகிச்சை பலனின்றி தாய் வினிதா பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த வினிதா, அதிக விஷத்தை குதித்துள்ளார், தன் மூன்று மகள்களுக்கும் மருந்தின் அளவை குறைத்து கொடுத்துள்ளதால், மூன்று பெண் குழந்தைகளும் உயிர் பிழைத்தது தெரியவந்துள்ளது.