கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக இளம்பெண் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை முகலிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுகந்தி (32). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியை சேர்ந்த லாரி டிரைவர் ஐயப்பன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்

.

ஐயப்பன் லாரி டிரைவர் என்பதால் பெரும்பாலான நாட்கள் வெளியூர்களுக்கு சென்று விடுவார். இந்நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாக சுகந்திக்கு அதே பகுதியை சேர்ந்த  இளைஞருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தனர். பின்னர் சுகந்தி தன்னுடைய  குழந்தைகள் இருவரையும் அழைத்து வந்து முஜிபுர் ரஹ்மானுடன் சேர்ந்து பள்ளிக்கரணை நாராயணபுரம் காந்திநகர் 1-வது தெருவில் குடும்பம் நடத்தினார். இந்நிலையில் கடந்த 6 மாதத்துக்கு முன்பாக இந்த இளைஞரை அவரது உறவினர்கள் அழைத்து சென்றுவிட்டனர்.

 இதையடுத்து சுகந்திக்கு நாளடைவில் பல ஆண்களுடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தான் தனியாக இருப்பதாக கணவர் ஐயப்பனிடம் சொல்லி குடும்பம் நடத்த வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். சுகந்தி கணவருடன் வாழ்ந்து வந்தாலும் பல ஆண்களுடனான தொடர்பை நிறுத்தவில்லை. இது அவரது கணவருக்கு தெரிவந்தது. இதனையடுத்து சுகந்தியும் திருந்தி வாழ்வதாக உறுதி அளித்திருந்தார். 

இந்நிலையில் சமீபத்தில் சுகந்தி ஒருவருடன் உல்லாசமாக இருப்பதை ஐயப்பன் நேரில் பார்க்க நேர்ந்ததால் கடும் அதிர்ச்சி அடைந்தார். கடும் ஆத்திரத்தில் இருந்த ஐயப்பன் மனைவி கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி நேற்று முன்தினம் மாலை குழந்தைகளை விளையாடுவதற்கு வீட்டை விட்டு வெளியே அனுப்பி வைத்தார். பின்னர் வீட்டில் இருந்த கத்தியால் சுகந்தியின் கழுத்தை துடிக்க துடிக்க அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.

கொலை செய்து ஐயப்பன் தப்பிச்சென்றார். வெளியி்ல் விளையாடி விட்டு வீட்டுக் சென்ற குழந்தைகள் தாய் ரத்த வெள்ளத்தில் இருந்ததை கண்டு கதறி அழுதனர். உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கணவரை தேடி வந்தனர். இதற்கிடையில் வேளச்சேரி விஜயநகரில் நேற்று முன்தினம் இரவு வேளச்சேரி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஐய்யப்பனை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் ஐயப்பன் மனைவியை கொலை செய்துவிட்டு வந்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஐயப்பனை போலீசார் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கடந்த சில வருடங்களாக கள்ளக்காதல் தொடர்பான கொலைகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.