வெளியானது CCTV காட்சி..! திக் திக் மங்களூரு கலவர காட்சி..! 

மங்களூரு கலவரத்தில் ஈடுபட்டவர்கள், திட்டமிட்டே வன்முறையில் ஈடுபட்ட அனைத்து காட்சியும் சி.சி.டி.வி  கேமராவில் பதிவாகி உள்ளது.

வன்முறையில் ஈடுபட்டவர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை அடித்து நொறுக்குவதும், அதற்கு முன்னதாக தன்னை யாரும் அடையாளம் தெரிந்துக்கொள்ளாதபடி தன் முகத்தை மறைத்து, அவர்களை சுற்றி உள்ள சிசிடிவி கேமராக்களை செயலிழக்க செய்துள்ளனர்.

இருந்தபோதிலும் மற்ற சில கேமராக்கள் மூலமாக வன்முறையில் ஈடுபட்ட காட்சிகள் அனைத்தும் பதிவாகி உள்ளது. தற்போது இந்த காட்சிகள் அடங்கிய சிசிடிவி வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது. 

அதேசமயத்தில், அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு தவிர்க்கும் பொருட்டு காவல் துறையினரும் வன்முறை சம்பவங்களை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்ததாகவும், மருத்துவமனையில் பதுங்கி இருந்த சில போராட்டக்காரர்களை பிடிக்க மட்டுமே காவலர்கள்  முயற்சி செய்ததாக கூறப்பட்டு இருந்தது 

இந்த ஒரு தருணத்தில் மூட்டை மூட்டையாக ஒரு வாகனத்தில் கற்களை கொண்டு வந்து இறக்குவதும், அந்த கற்களை கொண்டு வீசி எறிவதும், கிரிக்கெட் பேட் கொண்டு சிசிடிவி கேமராவை அடித்து நொறுக்குவதும் என வன்முறையில் ஈடுபட்டு உள்ளது சிசிடிவி கேமரா மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
"

இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் டாம் வடகன் தெரிவிக்கும் போது ,

“மங்களூரு வன்முறை ஒரு திட்டமிடப்பட்ட சதி" என நாங்கள் அன்றே சொல்லி இருந்தோம். ஒரு சில சமூக விரோதிகள் வன்முறையில் ஈடுபட்ட காட்சியை பார்த்தாலே தெரிகிறது உண்மை என்னவென்று.. அவர்களின் சுயநலத்திற்காக என்னவெல்லாம் செய்கிறார்கள்... இந்த வன்முறைக்கு பின் உண்மையான சம்பவம் என்ன என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது" என தெரிவித்து உள்ளார்.