சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் . இவர் கடந்த பல மாதங்களாக கஞ்சாவிற்கு அடிமையாகி இருப்பதாக கூறப்படுகிறது . எந்த நேரமும் கஞ்சா போதையில் இருக்கும் இவர் , அதன் காரணமாக பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்கிறார் . இதனால் இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருக்கிறது .

இந்த நிலையில் சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கஞ்சா போதையில் சீனிவாசன் நுழைந்திருக்கிறார் . அரை நிர்வாண கோலத்தில் இருந்த அவர் தான் வைத்திருந்த பிளேடால் தனது மார்பு மற்றும் கழுத்து பகுதிகளில்  தன்னைத்  தானே அறுத்து கொண்டிருக்கிறார் . தன்னை காவல்துறையினர் நிம்மதியாக வாழ விடுவதில்லை என்று கூறிக்கொண்டே அறுத்துக்கொண்டார் .

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த காவல் நிலைய அதிகாரிகள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் . இந்த சம்பவத்தில் காவல்துறையினர் அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்திருக்கின்றனர் .

காவல் நிலையத்திலேயே போதையில் ஒருவர் பிளேடால் தன் கழுத்தை அறுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.