இளம் பெண்களை குளிக்கும் சமயத்தில் ஓட்டை வழியாக பார்த்து ரசித்துள்ளார் ஒரு இளைஞன், பல வருஷமாக இப்படி பெண்கள் குளிப்பதை மறைவில் நின்று பார்த்து ரசித்த சுமை தூக்கும் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

காட்டேரிக்குப்பம் அருகே சந்தை புதுக்குப்பம் ஒத்தவாடை வீதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் பரத் என்ற பரதி சேதராப்பட்டில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் அந்த பகுதியில் பெண்கள் குளிப்பதை மறைவிடத்தில் நின்று பார்த்து ரசிப்பதை பல வருஷங்களாக இதை செய்து வந்துள்ளார். இப்படி செய்யாதே என பலர் இது பற்றி பலமுறை கண்டித்தும் இந்த பழக்கத்தை பரத் கைவிடுவதாக இல்லை.

இந்நிலையில், சம்பவத்தன்று சந்தை புதுக்குப்பம் கிராமத்தில் 23 வயது இளம்பெண் தனது வீட்டில் குளித்து கொண்டு இருந்தார். அப்போது பரத் அந்த வீட்டின் பக்கத்தில் புது வீடு கட்டுமான பணி நடந்து வந்த இடத்தின் வழியாக சென்று அந்த பெண் குளிப்பதை பார்த்து ரசித்துக் கொண்டு, தகாத வேலையை செய்துள்ளார். இதனை பார்த்துவிட்ட அந்த பெண் அதிர்ச்சி அடைந்து பயங்கரமா கத்தி கூச்சலிட்டார். அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதும் பரத் உடனே அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து அந்த பெண்ணின் தாய் காட்டேரிக்குப்பம் போலீசில் புகார் அளித்தார். அப்போது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து பரத்தை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.