லோன் கிரெடிட் ஆன சில நிமிடங்களில் ஒரு லட்சம் ரூபாய் போச்சு! கோவையில் ஷாக்கிங் சம்பவம்!
பர்சனல் லோன் கிரெடிட் ஆன சில நிமிடங்களிலேயே ஒரு லட்சம் ரூபாயை பறி கொடுத்த நபர் வங்கி கிளை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை உக்கடம் பகுதியை சேர்ந்தவர் அனால் அசார் என்கின்ற அசாருதீன் இவர் சொந்தமாக இரும்பு வியாபாரம் செய்து வருகிறார் இந்த நிலையில் இவருடைய நண்பரின் பண தேவைக்காக இண்டஸ் இன்ட் வங்கியில் ரூபாய் 2 லட்சத்து 12000 பர்சனல் லோன் ஆக நேற்று மாலை எடுத்துள்ளார்.
இந்த நிலையில் லோன் இவருடைய வங்கி கணக்கு வந்த சில நிமிடங்களிலேயே 95 ஆயிரம் 5 ஆயிரம் என இரண்டு முறை டெபிட் செய்யப்பட்டுள்ளது இதனால் அதிர்ச்சி அடைந்தவர் உடனடியாக ஆன்லைன் மூலம் வங்கி கணக்கை முடக்கியுள்ளார் அதனை தொடர்ந்து இன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார்
இதனைத் தொடர்ந்து இவர் ஒப்பணக்கார வீதியில் உள்ள வங்கி கிளைக்கு சென்று இதுகுறித்து வங்கி மேலாளர் இடம் முறையிட்டுள்ளார் அப்போது அதற்கு வங்கி மேலாளர் தங்களுடைய இந்த கிளையில் இருந்து யாரும் பர்சனல் லோன் கொடுக்கவில்லை சென்னையிலிருந்து ஒரு நபர் கொடுத்துள்ளார் என்றும் உங்களுடைய வங்கி கணக்கை முடக்கியுள்ளோம் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து புகார் அளித்துள்ளோம் அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
எக்கச்சக்க ஆஃபர் இருக்கு... ஆனா ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது 5 விஷயத்துல எச்சரிக்கையா இருக்கணும்!
இதில் உடன்பாடு ஏற்படாத ஆனால் அசார் வங்கி முன்பு திடீரென தரைல அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து அவர் கூறுகையில் இவருடைய வங்கியில் பணியாற்றும் நபர்தான் எனக்கு லோன் வாங்கிக் கொடுத்துள்ளார் ஆனால் இங்கு வந்து பார்த்தபோது அவர் சென்னையில் இருப்பதாக கூறுகின்றனர் என்னுடைய வங்கியில் இருந்து 95 ஆயிரம் 5 ஆயிரம் என இரண்டு முறை பணம் டெபிட் செய்யப்பட்டுள்ளது எனக்கு ஓடிபி எண் வராமல் எவ்வாறு பணத்தை டெலிட் செய்தார்கள் இதனால் இதற்கு வங்கியில் பணியாற்றுபவர்கள் தான் காரணம் எனக்கு என்னுடைய பணம் திரும்ப கிடைக்க வேண்டும் இல்லை என்றால் குடும்பத்துடன் சேர்ந்து தற்கொலை தான் செய்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் அதனை தொடர்ந்து வங்கிய அதிகாரிகள் அவரை அழைத்து சமணச பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தமாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது வேறு ஒருவருடைய வங்கி கணக்கிற்கு இந்த பணம் சென்றுள்ளது.
அது எச்டிஎப்சி வங்கி என தகவல் கிடைத்துள்ளது நாங்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றோம் கூடிய விரைவில் எவ்வளவு சீக்கிரமாக உங்களுடைய பணத்தை திரும்ப பெற்றுத் தர முடியுமா அத்தனை வழிகளையும் மேற்கொள்கிறோம் என்று எடுத்து கூறினார் மேலும் நாங்களும் காவல் நிலையத்தில் இது சம்பந்தமாக புகார் கொடுக்கவும் உள்ளோம் என்று கூறி அனுப்பி வைத்தனர்
தீபாவளியை ஒட்டி உத்வேகம் பெறும் #VocalForLocal இயக்கம்! பிரதமர் மோடியின் பாராட்டைப் பெற்ற விளம்பரம்!