மனைவியுடன் உல்லாசமாக இருந்த போது நேரில் பார்த்த கணவன் நெருங்கிய நண்பனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி அருகேயுள்ள சந்தம்பட்டியில் முன்னாள் ராணுவ வீரரான பெரியசாமி  அப்பகுதியில் கட்டிட கான்ட்ராக்ட் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.  இவருக்கு கல்யாணமாகி ஒரு மகன் உள்ளார். இவரின் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இதனிடையே 27-ஆம் தேதியன்று பெரியசாமி திடீரென்று மாயமானார். இது தொடர்பாக ராமமூர்த்தி அப்பகுதி போலீசில் புகார் கொடுக்க, போலீசாரும் தீவிர  தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனையடுத்து செந்தில் குமார் என்ற கட்டிட தொழிலாளி கைது செய்து அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

விசாரணையில்; திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தாமரை நகரை சேர்ந்த செந்தில்குமாருடன் பெரியசாமிக்கு தொழில்ரீதியான பழக்கம் ஏற்பட்டது.  இருவரும் நல்ல நண்பர்கள் கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது வீட்டிற்க்கே சென்று ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் அளவிற்கு நல்ல நண்பர்கள். செந்தில் குமாரின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்த போது அவருக்கும் செந்தில்குமாரின் மனைவி சரண்யாவிற்கும் நெருக்கம் ஏற்பட்டது. நெருக்கமானது நாளடைவில் கணவன் இல்லாத நேரத்தில் வந்து உல்லாசமாக இருக்கும் அளவிற்கு கள்ளக்காதலாக மாறியது.

கணவனை ஏமாற்றிவிட்டு சரண்யாவும், நண்பன் செந்திலுக்கு தெரியாமல் பெரியசாமியும் பல இடங்களுக்கு ஒன்றாக திரிந்து வந்தனர். நாளடைவில் இதனை தெரிந்துகொண்ட செந்தில்குமார் இருவரையும் கடுமையாக கண்டித்துள்ளார். ஒருநாள் நேரிலும் பார்த்ததால் இருவரையும் அடித்துள்ளார். இதனையடுத்து 2 மாதங்களுக்கு முன் சரண்யாவை பெரியசாமி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தன்னுடைய அண்ணன் வீட்டிற்கு அழைத்து சென்று தங்கியுள்ளார். இதனால் எரிச்சலடைந்த செந்தில்குமார் பெரியசாமியை போட்டு தள்ள முடிவு செய்தார்.

இந்நிலையில், தனது கூட்டாளிகளோடு சேர்ந்து செந்தில்குமாரை கொன்று அவருடைய சடலத்தை திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள காணிப்பாடி எனுமிடத்தில் புதைத்திருந்தார்.கைது செய்யப்பட்ட செந்தில் குமாரை அழைத்து சென்று புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில் கல்லால் தாக்கப்பட்டும், மர்ம உறுப்பு அறுத்தும் பெரியசாமி கொலை செய்யப்பட்டதாக  தெரிகிறது.