சம்பவம் கடந்த ஞாயிற்று கிழமை மாலை வேளையில் அரங்கேறியது. அப்போது தான் 40 வயதான வினோத் அஹிர்வார் அந்த கடைக்கு வந்திருக்கிறார்.
கடையில் சமோசா சாப்பிட்டதற்காக நபர் ஒருவரை கடை உரிமையாளர் அடித்துக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மத்திய பிரதேச மாநிலத்தின் சங்கர் நகரில் சோலா எனும் பகுதியில் ஹரி சிங் அஹிர்வார் என்பவர் சமோசா கடை நடத்தி வருகிறார். இவருக்கு 20 வயதில் மகன் இருக்கிறான். இவர்கள் நடத்தி வரும் சமோசா கடையில் தான் அந்த கொலை சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
"இந்த சம்பவம் ஞாயிற்றுக் கிழமை மாலை வேளையில் சங்கர் நகரின் சோலா எனும் பகுதியில் நடைபெற்றது. இதில் உயிரிழந்த நபரின் பெயர் வினோத் அஹிர்வார்," என்று சோலா மண்டிர் காவல் நிலைய இன் சார்ஜ் அனில் சிங் மவுரியா தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
சம்பவம் கடந்த ஞாயிற்று கிழமை மாலை வேளையில் அரங்கேறியது. அப்போது தான் 40 வயதான வினோத் அஹிர்வார் அந்த கடைக்கு வந்து இருக்கிறார். கடையினுள் சென்றதும், உரிமையாளரிடம் கேட்காமலேயே அங்கிருந்த சமோசாவை எடுத்து சாப்பிட தொடங்கி இருக்கிறார். மேலும் வினோத் அஹிர்வார் கடைக்கும் வரும் போது மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

தாக்குதல்:
ஞாயிற்றுக் கிழமை அன்று மது போதையில் ஒருவர் கடையினுள் வந்து, அனுமதி இன்றி சமோசாவை எடுத்து சாப்பிட்ட சம்பவம் கடையில் இருந்த உரிமையாளர் ஹரி சிங் அஹிர்வாருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அருகில் இருந்த கம்பை எடுத்து வினோத் அஹிர்வார் தலையின் மீது பயங்கரமாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த வினோத் அஹிர்வார் பின்னர் உயிரிழந்து விட்டார்.
கைது:
இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த சோலா மண்டிர் காவல் நிலைய அதிகாரிகள் சமோசா கடை உரிமையாளர் ஹரி சிங் அஹிர்வார் மற்றும் அவரது 20 வயது மகனையும் கைது செய்து அழைத்து சென்றனர். இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சமோசா சாப்பிட்டதற்காக ஒரு உயிர் கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
